பின்வரிசை – Pinvarisai

“இ-மெயில்” தந்தை ரே டாம்லின்சன் 74 வயதில் காலமானார்

Posted in அறிவியல் by pinvarisai on மார்ச் 8, 2016

உலக அளவில் எல்லோராலும் இன்று உபயோகிக்கப்படும் இமெயிலின் முன்னோடியான ரே டாம்லின்சன் காலமானார். அவருக்கு வயது 74.  தந்தி Image result for Ray Tomlinsonமற்றும் தபால் சேவையின் மூலம் அஞ்சல் அனுப்பியது உள்பட அத்தனை பழங்கால வழக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் “இமெயில்” எனப்படும் மின்னஞ்சல் முறையை கண்டுபிடித்தவர் ரேமண்ட் டாம்லின்சன். “@” என்னும் செயலியையும் கண்டறிந்து மெயில்களின் முகவரிக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் ரே. அமெரிக்காவில் பிறந்து மாஸாச்சூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம்பெற்ற டாம்லின்சன் அர்பாநெட் சிஸ்டம் முறையில் நெட்ஒர்க் இணைப்பால் ஒன்றிணைக்கப்பட்டுள்ள ஒரு கம்ப்யூட்டரில் இருந்து இன்னொரு கம்ப்யூட்டருக்கு கடிதங்களை அனுப்பும் முறையை 1971 ஆம் ஆண்டு முதன்முதலாக கண்டுபிடித்தார்.

பின்னர் @ குறியீட்டுடன் தூரத்தில் உள்ள இதர கம்ப்யூட்டர்களுக்கு அந்த தகவல்கள் போய்சேரும் புதிய தொழில்நுட்பத்தையும் வடிவமைத்தார். இன்று இமெயில் என்றழைக்கப்படும் இந்த செலவில்லாத துரிதமான கடிதப் போக்குவரத்தின் தந்தையாக விளங்கிய ரே டாம்லின்சன் தனது 74 ஆம் வயதில் கடந்த சனிக்கிழமை காலமானார்.
அயராத உழைப்பு மற்றும் தன்னடக்கத்தின் அடையாளமாக விளங்கிய அவரது மறைவுக்கு உலகின் பலநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான இணையதளவாசிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1978 ஆம் ஆண்டுவாக்கில் இந்த சேவையை மேலும் நவீனப்படுத்திய சிவா அய்யாத்துரை என்ற தமிழர் “இமெயில்” சேவைக்கான காப்புரிமையை 1982ம் ஆண்டு அமெரிக்க அரசிடம் இருந்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: