பின்வரிசை – Pinvarisai

இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க தொல். திருமாவளவன் வலியுறுத்து

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on மார்ச் 8, 2016

Image result for தொல்.திருமாவளவன்இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய  மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் திங்கள்கிழமை தெரிவித்தார். தோப்பூரை அடுத்த உச்சப்பட்டி அகதிகள் முகாம் அதிகாரியை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை அகதி ரவீந்திரன்  மின்கம்பத்தில் ஏறி தற்கொலை செய்து கொண்டார்.இதையடுத்து திங்கள்கிழமை காலை அவரது சடலம் பொதுமக்கள் அஞ்சலிக்காக அங்குள்ள மந்தைத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. ரவீந்திரன் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரவீந்திரனின் இறப்புக்கு தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம். இறந்த ரவீந்திரன் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள்  முகாம் என்ற பெயரில் திறந்த வெளி சிறைச் சாலையில் உள்ளனர். அவர்கள் அரசு அதிகாரிகளால் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இலங்கை அகதிகளுக்கு  இந்திய குடியுரிமை வழங்க மத்திய  மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: