பின்வரிசை – Pinvarisai

தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: மகாசிவராத்திரியன்று சிவன்கோவில்களுக்கு பலத்த பாதுகாப்பு-

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on மார்ச் 7, 2016

இந்தியாவிற்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலி காரணமாக இந்தியாவில்தனர்.Image result for சிவன் images உள்ள முக்கிய சிவன் கோவில்களில்  பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் மகாசிவராத்திரியன்று பக்தர்கள் பயமின்றி இறைவனை தரிசனம் செய்தனர். பாகிஸ்தானின்  10 லஷ்கர்-இ-தொய்பா  மற்றும் ஜெய்ஷ்-இ- முகமது தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளதாகவும்முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் நாட்டில் உள்ள முக்கிய திருக்கோவிலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடிய சாத்தியம் இருப்பதால் மகாசிவராத்திரியையொட்டி நாட்டில் உள்ள முக்கிய சிவன் கோவில்களில்  பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால்  இரவு மகாசிவராத்திரி பூஜைக்காக குவிந்திருந்த பக்தர்கள் இறைவனை எந்தவித பயமின்றி இறைவனை தரிசித்தனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலி காரணமாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நாட்டின் உள்துறை பாதுகாப்பு நிலமை குறித்து உயர் மட்ட கூட்டத்தை டெல்லியில் நடத்தினார்.
இதில் உள்துறைசெயலாளர் ராஜீவ் மெகிரிஷி  உளவுத்துறை இயக்குனர் தினேஷ்வர் ஷர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.  10தீவிரவாதிகள் நாட்டின் உயரிய மதிப்பு மிக்க இடங்களை தாக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வந்த நிலையில் குஜராத் திருக்கோவில்கள் உள்பட நாட்டின் முக்கிய கோவில்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.
 இரவு முழுவதும் பகலைப்போல பாதுகாப்பு இருந்ததால் பக்தர்கள் எந்தவித பயமும்இன்றி வழிபாடு நடத்தினார்கள். தமிழகத்தில்  முக்கிய கோவில்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு கூடுதலாக்கப்பட்டிருந்தது.
அதேப்போன்று ஆந்திரா  உத்தரப்பிரதேசம்  தெலுங்கானா,  கோவா ,  மத்திய பிரதேசம்,   ராஜஸ்தான்,  சண்டிகர் ஆகிய மாநிலங்களிலும் கோவில்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தலைநகர் டெல்லியில் முக்கிய கோவில்களை சுற்றி  போலீசார் பாதுகாப்புபணியில் இருந்தார்கள்.
போலீசார் பக்தர்கள் கூட்டத்தில் சீருடையணியாமல் பாதுகாப்பு பணியில் வந்தார்கள். மெட்ரோ ரயில் நிலையங்கள்  முக்கிய மார்க்கெட்டுகள்  பஸ்நிலையங்கள் ஆகிய இடங்களிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோவாவில்  தேசிய பாதுகாப்பு படையை(என்.எஸ்.ஜி) சேர்ந்த 4 குழுக்கள் சல்லடை போட்டு தீவிரவாதிகள் உள்ளனரா என தேடினர்.
அங்குள்ளமுக்கிய கோவில்களில் பாதுகாப்பு  மற்ற  இடங்களை கூடுதலாக போடப்பட்டிருந்தது. குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது மாநில பாதுகாப்பு நிலமை குறித்து விவாதித்தார். டெல்லி மற்றும் நாட்டின் முக்கிய இடங்களில் தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்பதால் பாதுகாப்பு தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் இல்லை என்பது 100சதவீதம் உறுதியான பின்னரே பாதுகாப்பு கடுமை குறையும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தில் சோமநாத் ஆலயம் தாக்கப்படலாம் என்ற தகவல் உள்ளதால் அந்த சிவன் கோவிலுக்கு  250போலீசார் மற்றும் மாநில ரிசர்வ் போலீசார் மற்றும் என்.எஸ்.ஜி கமண்டோக்கள் கோவிலுக்கு வெளியே கடந்த இரு நாட்களாக தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்தார்கள்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுகிறார்களா என தீவிரபரிசோதனை நடக்கிறது.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: