பின்வரிசை – Pinvarisai

தமிழகத்தில் ஈழ அகதி மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை: அரசின் மனித நேயமின்மையே காரணமாம்

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on மார்ச் 7, 2016

Image result for மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு கிராமத்தில் உள்ள முகாமைச் சேர்ந்த ரவிச்சந்திரன்மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு கிராமத்தில் உள்ள முகாமைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற அகதி அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மின்சாரக் கம்பத்தில் தொங்கி தற்கொலை செய்து கொண்டhர்.இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், வருத்தமும்,  துயரமும் அளிக்கிறது. நம்பி வந்த
அகதிகளின் உயிரைக் காக்கத் தவறியதற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும் என்று  பாமக  நிறுவனர்  Image result for ராமதாஸ்ராமதாஸ் கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்-                 தமிழக ஆட்சியாளர்கள் மற்றும் சில அதிகாரிகளின் மனிதநேயமற்ற அணுகுமுறை தான் இலங்கை அகதி ரவிச்சந்திரனின் தற்கொலைக்கு காரணம் ஆகும்.கூத்தியார்குண்டு முகாமிலுள்ள அகதிகளை கணக்கெடுக்கும் பணி சில நாட்களாக நடைபெற்று வருImage result for வைகோகிறது. முகாமில்   கணக்கெடுப்புக்காக சென்ற வருவாய் அதிகாரி ஒருவர்  ரவிச்சந்திரன் முகாமில் இல்லாதது குறித்து விசாரித்துள்ளார். அப்போது அங்கு வந்த ரவிச்சந்திரன் உடல்நலம் பாதித்த பேரனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வந்ததால் தாமதமானதாக கூறியுள்ளார். ஆனால்  அதை ஏற்க மறுத்த அதிகாரி ரவிச்சந்திரனின்  பெயரை அகதிகள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளார். இப்படி செய்தால் நாங்கள் எப்படி வாழ முடியும்? என்று  ரவிச்சந்திரன் கேட்ட போது  வாழ வழியில்லை என்றால் மின்சாரம் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்து கொள் என்று திமிராகக் கூறியுள்ளார்.

இதனால் மனம் உடைந்த ரவிச்சந்திரன் அங்கிருந்த  உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி மின் கம்பியை கால்களால் மிதித்து தற்கொலை செய்துகொண்டார்.
அரசின் தவறான அணுகுமுறையால்  அகதிகள் உயிரை மாய்த்துக் கொள்வது இது முதல் முறையல்ல. கடந்த சில மாதங்களில் மட்டும் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் 6 பேர் தற்கொலை செய்து கொண்டும் மர்மமான முறையிலும் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.
காவல்துறையினரின் கொடுமைகளை தாங்க முடியாமல்  சசிகரன் என்ற அகதி நஞ்சு அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.  செந்தூரன் என்ற அகதி தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பல முறை சாகும் வரை உண்ணாநிலை போராட்டம் நடத்தினார்.
ஒரு கட்டத்தில் அவரது போராட்டத்துக்கு பணிந்து 17 அகதிகள் விடுதலை செய்யப்பட்ட போதிலும் மீதமுள்ள ஈழ அகதிகள் மீதான கொடுமைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
போர் உள்ளிட்ட காரணங்களால் தஞ்சம் தேடி வரும் அகதிகளை உள்நாட்டு குடிமக்களைப் போல நடத்த வேண்டும் என ஐ.நா கூறுகிறது. ஆனால்  ஈழத் தமிழ் அகதிகளின்  நலனுக்காக சட்டம் கூட தமிழகத்தில் நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
ஈழ அகதி ரவீந்திரன் தற்கொலையால் உலக அளவில் தமிழகத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது வேதனை அளிப்பதாக  மதிமுக  பொதுச் செயலாளர்  வைகோ கூறியுள்ளார்.
இது  குறித்து  வைகோ  வெளியிட்ட செய்திக் குறிப்பில்-
ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் அடைக்கலம் பெற்ற ஈழத்தமிழர்களை அந்த நாடுகள் உரிய மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்துகின்ற நிலையில்  தாய்த்தமிழகத்தில் அவர்களைத் தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் கருதி அதிகாரிகள் அச்சுறுத்தி மிரட்டுகின்ற கொடுமைகள் எல்லை மீறிச் சென்ற நிலையில்தான் ரவீந்திரன் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஈழத்தமிழ் அகதிகள் முகாம்களை நான் பார்வையிட்டு  அங்கே உள்ள நிலைமைகளை விளக்கி அறிக்கை வெளியிட்டு இருந்தேன். அங்கே அவர்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
தங்கள் உடைமைகளைப் பறிகொடுத்து விட்டு  உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ளத் தஞ்சம் கேட்டுத் தமிழகத்தில் அடைக்கலம் புகுந்த ஈழத்தமிழர்களை தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் கருதுகின்ற அதிகாரிகளின் மனப்போக்கு மாற வேண்டும். இதுகுறித்துத் தமிழக அரசு உரிய வழிகாட்டுதலை அறிவிக்க வேண்டும்.
தமிழக அரசு அதிகாரி ஒருவரின் கெடுபிடியால் ஈழத்தமிழர் ஒருவரின் உயிர் பறிபோனது என்ற செய்தி  உலக அளவில்  தமிழகத்திற்குத் தலைக்குனிவை  ஏற்படுத்தி இருக்கின்றது.
அந்த அவப்பெயரை நீக்குகின்ற வகையில் தமிழக அரசின் நடவடிக்கை அமைந்திட வேண்டும். வருவாய் அதிகாரி மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ரவீந்திரனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் அளித்திட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகின்றேன் என்று கூறியுள்ளார்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: