பின்வரிசை – Pinvarisai

இரண்டு வாரங்களாக உணவுத்தவிர்ப்பு போராட்டம்: தமிழ் அரசியல்கைதிகள் நிலை கவலைக்கிடம்; சிறுநீருடன் இரத்தக்கசிவு – மறுக்கிறார் ஊடகப்பேச்சாளர்

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on மார்ச் 7, 2016

கடந்த 11 நாட்களாக கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உணவுத்தவிர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்திவரும் தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரில் நால்வரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் தெரிவித்துள்ளார் என்று “தமிழ் Mirror” தினசரிப்பத்திரிகை இன்று (7) செய்தி வெளியிட்டிருக்கிறது. உணவுத்தவிர்ப்பு போராட்டம் நடத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னரே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
உணவுத்தவிர்ப்பு போராட்டம் நடத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலைJaffna-Fasting-Protest-10 படுமோசமாக இருக்கிறது. நான்கு தமிழ் அரசியல் கைதிகளுக்கு சிறுநீரோடு இரத்தமும் வெளியேறி வருகிறது என்றும் இவர்களுக்கு சேலைன் ஏற்றுவதற்கு நடவடிக்கை எடு;க்கப்பட்டபோதிலும் அவர்கள் அதனை நிராகரித்து விட்டனர் என்றும்அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர்  துஷார உபுல்தெனியாவிடம்  விசாரித்த போது “உணவுத்தவிர்ப்பு போராட்டம் நடத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்ற செய்தி பொய்யானது” என அவர் மறுத்துள்ளார் என்றும் அச்செய்தி தெரிவித்துள்ளது.

இவ்வாறு இருக்க – அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்த சபை ஒத்திவைப்பு பிரேரணை நாளை செவ்வாய்க்கிழமை (8) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருப்பதால் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்  எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் தலைமையில் நேற்று (06) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
காணாமல்போனோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒத்திவைப்பு பிரேரணை விவாதிக்கப்பட்ட பின்னர் கைதிகளின் விடுதலை சம்பந்தமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு முடிவொன்று எடுக்கப்படும்.
இதனைக் கருத்தில்கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி,   புளொட்,  ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் நேற்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
கைதிகள் விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியம் குறித்து இக்கூட்டத்தில் பங்காளிக் கட்சிகளின் பிரமுகர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். 85 தமிழ் அரசியல் கைதிகளைப் புனர்வாழ்வுக்கு அனுப்பும் செயற்பாட்டில் ஏற்பட்டிருக்கும் இழுபறி நிலைமைகள் குறித்தும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டதுடன் புனர்வாழ்வு விடயத்தில் கைதிகளின் இணக்கப்பாட்டைப் பெறுவது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த நிலையில் நாளையதினம்(8)அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்த சபை ஒத்திவைப்பு பிரேரணை முன்வைக்கப்படவிருப்பதால்,   அதனைத் தொடர்ந்து இதுவிடயத்தில் துரித நடவடிக்கை எடுக்க முடியும். எனவே  இதனை கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அரசியல் கைதிகளிடம் கோரிக்கை விடுக்கவும் முடிவெடுக்கப்பட்டது.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கைதிகள் விவகாரம் தவிர கூட்டமைப்பின் ஒற்றுமை,   இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரம்,   கட்சிப் பதிவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அரசியலமைப்பு மறுசீரமைப்புக்காக பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணையின் முகவுரையில் இருந்த ‘இனப்பிரச்சினைத் தீர்வு’ என்ற விடயம் நீக்கப்பட்டமை குறித்து பங்காளிக் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இது தொடர்பில் கூட்டமைப்பு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையொன்றை நடத்துவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: