பின்வரிசை – Pinvarisai

தந்தைக்கு பின்லேடன் எழுதிய உருக்கமான கடிதம்

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on மார்ச் 5, 2016

2011ஆம் ஆண்டு அமெரிக்க படைகளால் அல்-கொய்தா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார். அப்போது அவர் பதுங்கியிருந்த இடத்தில் 113 முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு அமெரிக்காவுக்கு கொண்டு செImage result for bin ladenல்லப்பட்டன. அரேபிய மொழிகளில் இருந்த அந்த ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ள அமெரிக்கா அவற்றில் சில முக்கியமானவைகளை வெளியிட்டுள்ளது. அவற்றில்  1990-களில் பின்லேடனால் எழுதப்பட்டதாக கருதப்படும் ஒரு கடிதத்தை பின்லேடனின் கடைசி உயிலாக அமெரிக்க உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
அந்த கடித்தத்தில் சூடானில் உள்ள தனது ரூ.200 கோடி பணத்தை  எப்படி  யார் யாருக்கு பிரித்துக்கொடுப்பது என்று எழுதியுள்ள பின்லேடன்  தனது தந்தையிடமும் உறுக்கமாக சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.

பின்லேடன்  சூடான் நாட்டு அரசு விருந்தினராக அந்நாட்டில் 5 ஆண்டுகள் தங்கி இருந்தார். பின்னர்  1996-ம் ஆண்டு மே மாதம்  அமெரிக்காவின் நிர்பந்தத்தால் அவரை அங்கிருந்து சூடான் அரசு வெளியேற்றியது. அவரது பணமும் அங்கேயே உள்ளது.
பின்லேடன் எழுதியதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள கடிதத்தில் சூடானில் உள்ள ரூ.200 கோடியில் ஒரு சதவீத பணத்தை அல்-கொய்தா மூத்த தலைவர் மபூஸ் அவுல்ட் அல்-வாலித்துக்கு கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரூ.20 லட்சம்வரை அல்-வாலித்துக்கு கொடுக்கப்பட்டு விட்டதாகவும்  சூடானில் உள்ள பணத்தை மீட்டுக் கொண்டு வந்தால்   அவருக்கு பரிசு கொடுப்பதாக தான் வாக்குறுதி அளித்திருப்பதாகவும் பின்லேடன் அதில் எழுதி உள்ளார்.
இன்னொரு ஒரு சதவீத பணத்தை மற்றொரு கூட்டாளியான என்ஜினீயர் அபு இப்ராகிம் அல்-இராகி சாத்துக்கு கொடுக்க வேண்டும் என்று பின்லேடன் கூறியுள்ளார். அந்த நபர்  சூடானில் பின்லேடனின் முதலாவது கம்பெனியை நிறுவ உதவியவர் ஆவார்.
குறிப்பிட்ட அளவு சவுதி ரியால் பணத்தையும்   தங்கத்தையும் தனது தாயார்  மகன்  மகள்  சித்தப்பா சித்தப்பாவின் பிள்ளைகள்  தாயாரின் சகோதரிகள் ஆகியோர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பின்லேடன் கூறியுள்ளார்.
மீதி பணம் முழுவதையும்  புனித போருக்காக பயன்படுத்துமாறு பின்லேடன் கேட்டுக்கொண்டுள்ளார். தனது விருப்பத்தை நிறைவேற்றுமாறு குடும்பத்தினரை வலியுறுத்தி உள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி பின்லேடன் எழுதிய மற்றொரு கடிதமும் வெளியிடப்பட்டுள்ளது. அதில்  தந்தைக்கு முன்பே தான் இறந்து விட்டால் தன்னுடைய மனைவியையும்  பிள்ளைகளையும் தந்தை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று பின்லேடன் கூறியுள்ளார்.
‘உங்களுக்கு பிடிக்காததை நான் செய்திருந்தால் என்னை மன்னியுங்கள்’ என்று கடிதத்தின் இறுதியில் தந்தையிடம் பின்லேடன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: