பின்வரிசை – Pinvarisai

வலுவற்ற குற்ற ஒப்புதல் மூலம் மற்றொரு வழக்கா? மூத்த வக்கீல் வாதம்: 2 அரசியல் கைதிகள் விசேட நீதிமன்றால் விசாரணையிலிருந்து விடுவிப்பு

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on மார்ச் 1, 2016

ஒரு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு வலுவற்றதாக்கப்பட்ட அதே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக Image result for K.V.Thavarasaவைத்து மற்றொரு வழக்கு விசாரணையை முன்னெடுத்துச் செல்லலாமா என்று மூத்த வக்கீல் கே. வீ. தவராசாவினால் முன்வைக்கப்பட்ட வாதத்தை அடுத்து இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அரசியல் கைதிகளின் ழக்குகளை விசாரணை செய்து துரிதப்படுத்த கடந்த மார்கழி மாதம் 10ம் திகதி கொழும்பில் நிர்மாணிக்கப்பட்ட விசேட நீதிமன்றம் முதன் முதலாக இரண்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்தது.

கணேசரத்தினம் சாந்ததேவன் மற்றும்  முருகையா கோமகன் ஆகிய இருவருக்கும் எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குகள் கடந்த தவணை விசேட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை எதிரிகளின் சார்பில் ஆஜராகிய மூத்த சட்டத்தரணி கே.வி தவராசா தனது வாதத்தில்-
இந்த வழக்கில் எதிரிகளக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் கணேசரத்தினம் சாந்ததேவன் மற்றும் முருகையா கோமகன் ஆகிய இருவருக்கும் எதிராக 2004ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் திகதி வெள்ளவத்தையில் அரச விரோத  தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இலங்கை குடியரசின் ஆயுதப்படையினருடன் சேர்ந்து செயல்பட்ட கருணா குழுவின் நான்கு உறுப்பினர்களை வெடி வைத்துக் கொல்வதற்காக தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்களின் ஒருவரான நியுட்டனுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியது உட்பட-
கணேசரத்தினம் சாந்ததேவன் மற்றும் முருகையா கோமகன்  ஆகியோருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்திலும் வவுனியா கொழும்புமேல் நீதிமன்றத்திலும் எதிரிகளால் வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் பிரதான சான்றாகக் கொண்டு வழக்குக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
வவுனியா மேல்நீதிமன்றில் கணேசரத்தினம் மற்றும் சாந்ததேவன் முருகையா கோமகனுக்கும்; எதிராக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கில்  எதிரிகளினால் உதவிப் பொலிஸ் அதிபர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறுப்படட ஒப்புதல் வாக்குமூலம் சுயமாக வழங்கப்படவில்லையென குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை நீதிபதி நிராகரித்து கட்டளை வழங்கியுள்ளார்.
குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றினால் நிராகரிக்கப் பட்டதையடுத்து அரச சட்டத்தரணி கணேசரத்தினம் சாந்ததேவனுக்கும் மற்றும் முருகையா கோமகனுக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வழக்கை தொடர்ந்து நடாத்துவதற்கு வேறு சான்றுகளில்லையென நீதிமன்றிற்கு அறிவித்ததையடுத்து வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி எதிரிகளை  விடுதலை செய்துள்ளார்.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எதிரியிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயமாகப் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலமாக ஏற்றுக்கொள்ளமுடியாதென நிராகரித்துள்ளார்.
எனவே வவுனியா மேல் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மீண்டும் இந்த நீதிமன்றம் கேள்விக்குட்படுத்த முடியாதுதென தனது வாதத்தை முன்வைத்ததுடன்   தனது வாதத்தில்  தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்களில் மேல் நீதிமன்றம் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் விசாரணையில் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை கைதி சுயவிருப்பத்தில் வழங்கவில்லையென நிராகரித்தால் மற்றைய வழக்குக்களை நடாத்த வேறு சான்றுகள் இல்லையெனில் வழமையாக மற்றைய வழக்குக்களை சட்டமா அதிபர் மீளப்பெறுவதே நடைமுறையாகும்.
வவுனியா மேல் நீதிமன்ற கட்டளையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளை இந்த நீதிமன்றத்திற்கும் அரச சட்டவாதிக்கும் கையளித்துள்ளேன் எனவே வழமைபோல இந்த வழக்கு சட்டமா அதிபரினால் மீளப்பெறப்படவேண்டும்.
ஆனால் இந்த வழக்கில் 35 வருடங்களின் பின்னர்  வவுனியா மேல் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்ட ஒரு குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை கொழும்பு நீதிமன்றம் விசாரிக்கவேண்டும் என சட்டமா அதிபர் இந்த நீதிமன்றத்தை கோருகின்றார்.
வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் வழங்கிய கட்டளைக்கு எதிராக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு மனுவை தாக்கல் செய்யமுடியும்.
 ஆனால் ஒரே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு சட்டமா அதிபரினால் தாக்கல்  செய்யப்பட்ட வழக்குகளில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியினால் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப்பட்ட பின்னர் அந்தக் கட்டளையை அரச சட்டத்தரணி இந்த நீதிமன்றில் மீளாய்வு செய்வது ஏற்றுக்கொள்ளமுடியாத செயலாகும்.
இந்த வழக்கின் இரண்டு எதிரிகளும் வவுனியா மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டு 15 மாதங்கள் கடந்து விட்டன.   கடந்த ஒரு வருடமாக கொழும்பு 6ம் இலக்க மேல் நீதிமன்றில் கணேசரத்தினம் மற்றும் சாந்ததேவனுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தொடர்ந்தும் இந்த நீதிமன்றில் நடாத்தாமல் குற்றச்சாட்டு பத்திரங்களை சட்டமா அதிபர் மீளப்பெற்று எதிரிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என தனது வாதத்தை முன்வைத்ததையடுத்து-
சட்டமா அதிபர் தனது நிலைப்பாட்டை நீதிமன்றிற்கு தெரிவிப்பதற்காக நீதிமன்றில் தவணை கோரியதையடுத்து நேற்று (29) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொழுது சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகிய சிரேஸ்ட அரச சட்டத்தரணி நயோமி விக்கிரமசிங்க நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்ததாவது-
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எதிரியிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் சுயமாகப் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலமாக ஏற்றுக் கொள்ள முடியாதென நிராகரித்துள்ளமையை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கின் இரண்டு எதிரிகளுக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுப் பத்திரங்களையும் சட்டமா அதிபர் மீளப்பெற்றதையடுத்து விசேட மேல்நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா இரண்டு எதிரிகளையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
அரசதரப்பில் சிரேஸ்ட அரச சட்டத்தரணி நயோமி விக்கிரமசிங்கவும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் சட்டத்தரணிகளான நளனி இளங்கோவன். செல்வராஜா துஸ்யந்தன் ஆகியோரது அனுசரனையில் மூத்த சட்டத்தரணி கே. வி தவராசா ஆஜரானார்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: