பின்வரிசை – Pinvarisai

எல்லைதாண்டும் இந்திய மீனவர்கள்: யாழ். இந்திய துணைத் தூதரம் முன் ஆர்ப்பாட்டம்

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on பிப்ரவரி 29, 2016

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி  நுழைந்து  தடை செImage result for Indian Consulate General Jaffnaய்யப்பட்ட இழுவைப் படகுகள்  மூலம் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்களை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தியாழ்ப்பாணத்திலுள்ள  இந்தியத் துணைத்தூதரகத்தின் முன்பாக இன்று திங்கட்கிழமை (29) ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. வடமாகாண மீனவ கூட்டமைப்பு,  வடமாகாண கடற்றொழிலாளர்களின்இணையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களின்  ஊர்வலம்  யாழ். இந்திய துணைத்தூதரகம் வரை சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது  யாழ். இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜனிட20 Indian fishermen arrested for fishing across the Pakistan border ம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. ‘வடக்கு கடற்பரப்பு எல்லை மீறலை உடனே தடுத்து நிறுத்து, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடல்வளத்தை அழித்து மீன்பிடிக்கும் இந்திய இழுவைப்படகுகளை நிறுத்து’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கியவாறு  கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவு இணையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
உறவைச் சொல்லி கடல்வளத்தை சுரண்டாதே!, இலங்கைத் தீவு என்ன? உனக்கு கச்சதீவா?இ இருநாட்டினதும் மீனவர் மோதலை நிறுத்த அரசு உடனே முன்வருக!  போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு  ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள்  யாழ். மாவட்ட செயலகத்திலிருந்து  இந்தியத் தூதரகம் வரை பேரணியாக சென்றதுடன் அங்கு வடமாகாண கடற்றொழிலாளர்  கூட்டுறவு இணையத்தின் ,செயலாளர் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை இந்திய துணைத் தூதுவரிடம் கையளித்தார்.
இலங்கை துணைத் தூதரகம் முற்றுகை
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு ள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி சென்னையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம் முன்பாக இந்திய மீனவர்கள் இன்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இலங்கை ,சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த 27 மீனவர்களையும், 79 படகுகளையும் விடுவிக்க வேண்டும். இலங்கை  நீதிமன்றம் விடுவித்து கடலில் மூழ்கி சேதமடைந்த 18 படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்கு மத்திய–மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று  சென்னையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
 இதேவேளை  எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி குஜராத் மாநில மீனவர்கள் 20 பேரை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்தனர்.
அரபிக்கடல் பகுதியில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடல் எல்லை உள்ளது.  எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி பாகிஸ்தான் கடலோர காவல்படை அடிக்கடி இந்திய மீனவர்களை கைது செய்து வருகின்றனர்.
சமீபத்தில் 88 மீனவர்கள் இதுபோன்று கைதாகினர். இந்நிலையில் குஜராத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 20 மீனவர்களை பாகிஸ்தான் கடலோர காவல் படை கடந்த சனிக்கிழமை கைது செய்துள்ளதுடன்  மேலும் நான்கு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: