பின்வரிசை – Pinvarisai

கவுதமாலாவில் காப்புறுதிப்பணத்துக்காய பெற்றோரை கொலை செய்தவருக்கு 166 ஆண்டு சிறை

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on பிப்ரவரி 28, 2016

மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவை சேர்ந்தவர்  எட்கார் டி லியோன் ரோடாஸ் (வயது 32).  இவரது பெற்றோரும்  ஒரு சகோதரரும் கடந்த 2014-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர்.
தந்தை மரணத்துக்காக ரோடாஸ் ஆயுள் காப்பீடு தொகையை பெற்றார். தாயாரின் மரணத்துக்காக அவர் ஆயுள் காப்பீடு தொகையை பெற முயற்சித்தபோதுதான்  அவர் இன்சூரன்சு தொகையைப் பெறுவதற்கு தனது பெற்றோரையும்  சகோதரரையும் கொலை செய்ததும்  சம்பவத்தின்போது  அவரது 2 மகள்கள் காயம் அடைந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து ரோடாஸ்  கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். பெற்றோரையும்  சகோதரரையும் கொலை செய்ததற்காக அவர் மீது கவுதமாலா நகர நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடரப்பட்டது.
விசாரணை முடிவில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கருதிய நீதிமன்றம்  அவருக்கு 166 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
ஆனால் அந்த நாட்டின் சட்டப்படி அவர் அதிகபட்சமாக 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தால் போதும்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: