பின்வரிசை – Pinvarisai

ஷீரடி சாய்பாபா கோயில் விஐபி தரிசன கட்டணம் உயர்வு

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on பிப்ரவரி 27, 2016

ஷீரடி சாய்பாபா கோயிலில் விஐபி பக்தர்களுக்கான தரிசனம், ஆரத்தி சேவை ஆகியவற்றுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அக்கோயிலை நிர்வகிக்கும் ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையின் (எஸ்எஸ்எஸ்டி) செயல் அதிகாரி பாஜிராவ் ஷிண்டே வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சாய்பாபா கோயிலுக்கு வரும் விஐபி பக்தர்களுக்கான தரிசனம்,  ஆரத்தி சேவைக் கட்டணங்களை உயர்த்தியுள்ளோம். விஐபி தரிசனக் கட்டணம், ரூ.100-இல் இருந்து ரூ.200-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல்  அதிகாலை ஆரத்தி சேவைக்கான கட்டணம்  ரூ.500-இல் ரூ.600-ஆகவும்  பிற்பகல் ஆரத்தி சேவைக் கட்டணம் ரூ.300-இல் இருந்து ரூ.400-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண உயர்வு  அடுத்த மாதம் 1-ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. தரிசனம்,  ஆரத்தி சேவைக்காக நீண்ட வரிசையில் காத்திருந்து வரும் பக்தர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. அவர்களுக்கு இலவசப் பிரசாதம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: