பின்வரிசை – Pinvarisai

வங்கதேச இந்துக் கோயில் பூசாரி கொலை: இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கைது

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on பிப்ரவரி 27, 2016

வங்கதேசத்தில் உள்ள இந்துக் கோயிலின் தலைமை பூஜாரியை படுகொலை செய்த வழக்கில் தொடர்புடையதாக Image result for hindu priestஇஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்திய எல்லைக்கு அருகே உள்ள சோனாபோட்டா கிராமத்தில் உள்ள இக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை பூஜைக்கான ஏற்பாடுகளை அதன் தலைமை பூஜாரியான ஜகனேஸ்வர் ராய் (50) செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் ஜகனேஸ்வரை துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து மர்மநபர்களைப் பிடிக்க முயன்ற இரு பக்தர்களையும் தாக்கி காயப்படுத்திவிட்டு  அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.  இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.  இந்நிலையில் பூஜாரி படுகொலையில் ஈடுபட்டது தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 அவர்கள் கொடுத்த தகவலின்படி  பஞ்சகர் மற்றும் நில்பாமரி ஆகிய மாவட்டங்களில் போலீஸார் நடத்திய சோதனையின்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
 அவர்களிடம் இருந்து பூஜாரியை சுடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள்,  வெடிகுண்டுகள்,  கத்திகள்,  5 தோட்டாக்கள் மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: