பின்வரிசை – Pinvarisai

மாணவர் தலைவர் கன்னையா எந்த கோஷமும் எழுப்பவில்லை – பல்கலை பாதுகாவலர்-போலீஸ் தகவல்

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on பிப்ரவரி 27, 2016

புதுடெல்லி – ஜவகர்லால் நேருபல்கலைக்கழக (இடதுசாரி)  மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார் தேச துரோக கோஷம் எதுவும் எழுப்பவில்லை என்று அந்த பல்கலைக்கழகத்தில் காவல் பணியில் ஈடுபட்டு இருக்கும் போலீஸ்காரரும்  பாதுகாவலரும் தெரிவித்தார்கள்.  டெல்லியில் நாட்டின் புகழ்பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தலைவராக கன்னையா குமார்  (இந்திய கம்யூனிஷ்ட் கட்சி)  சிபிஐ கட்சியின் மாணவர் அமைப்பின் உறுப்பினர். சில நாட்களுக்கு முன்னர் பல்கலைக்கழக வளாகத்தில் பாராளுமன்ற கட்டிடதாக்குதல் குற்றவாளி அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனை தரப்பட்டது தவறு என ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை அப்சல் குருவின் 3வது நினைவு தினத்தையொட்டி   மாணவர்கள் நடத்தினார்கள்.

 இதில் கனிகியாகுமார் தேசத்திற்கு விரோதமாக போராட்டம் தூண்டும் வகையில் கோஷம் எழுப்பினார் என்று டெல்லி போலீசார் அவரை கைது செய்தார்கள். அவர்தற்போதுசிறையில் உள்ளார். அவர் மீதான வழக்கு பாட்டியாலா கோர்ட்டில் நடந்து வருகிறது.
கனிகியா மீது போலீசார் நடவடிக்கை எடுத்தது ஏன் என்று சி.பி.எம். கட்சியும் சி.பி.ஐ. கட்சியும் காங்கிரஸ் கட்சியும் ஐக்கிய ஜனதாதளமும் கேள்வி எழுப்பின. இந்த நிலையில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பாதுகாவலர் அமர்ஜித் குமார் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பெப்ரவரி 9ஆம்திகதியன்று ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சங்கம் நடத்திய நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கன்னையா குமார் எந்த வித கோஷமும் எழுப்பியதாக எனக்கு தெரியவில்லை என்றார்.
இந்த  நிகழ்ச்சி நடைபெறும் போது வெளிநபர்கள் 10-15பேர் அங்கு வந்திருந்தார்கள். வெளிநபர்கள் வருவதற்கு  ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் அனுமதி தராதபோதும்  அவர்கள் அந்த நிகழ்ச்சி இடத்தில் இருந்தார்கள் என்றும் அந்த பாதுகாவலர் தெரிவித்தார்.
தொலைக்காட்சி பேட்டி எடுத்த மற்றொரு நபர் தனது பெயர் ராம்பிர் என்றும் டெல்லி போலீசில் தலைமைக்காவலராக இருப்பதாகவும் தெரிவித்தார்.மாணவர் சங்க நிகழ்ச்சி நடந்த போது நான் சீருடை அணியாமல் இருந்தேன். அப்போது ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார் எந்த வித கோஷமும் எழுப்பவில்லை என்று தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்சல் குரு நினைவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது டெல்லி போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது ஏன் நடவடிக்கை எடுத்தார்கள் என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
பாதுகாவலர் அமர்ஜித் குமாரும் போலீஸ்காரர்  ராம்பிரும் தங்களிடம் விசாரணை தரப்பு குழுவினர்தான் கருத்துக்களை பதிவு செய்கிறார்கள் என நினைத்து நடந்த விஷயங்களை கூறிஉள்ளனர்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: