பின்வரிசை – Pinvarisai

இலங்கை மீனவர்கள் புழல் மத்திய சிறையில்

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on பிப்ரவரி 27, 2016

சென்னை,  இந்திய கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்த 9 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டனர். இந்திய கடலோர காவல் படையினர்  நாகப்பட்டினம் கடல் பகுதியில் சுமார்  70 கடல் மைல் தூரத்தில் அண்மையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இலங்கையைச் சேர்ந்த 9 மீனவர்கள் 2 படகில் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி  இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.

 இதையடுத்து 9 பேரையும் கைது செய்து  அவர்கள் வந்த படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்தில் கடலோர காவல் படையினர் ஒப்படைத்தனர்.
 இதைத் தொடர்ந்து இலங்கை மாத்தறைப் பகுதியைச் சேர்ந்த பிரம்மஸ்ரீ அபிதிர் (50),  எச்.பி. சம்பத் (26), தனஸ்ரீ (42),கே.சிந்திகா (48),சமன் (26),சுதாத் குமாரா (43), நிமார் (44),ஜெ.சுமித் (47),ஸ்ரீ அய்யா (52) ஆகிய 9 பேரும் எழும்பூர் சென்னை தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.
 மார்ச் 10-ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதித்துறை நடுவர் கணேசன் உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: