பின்வரிசை – Pinvarisai

இந்தியக் கொடி ஏற்றிய விராட் கோலியின் பாக். ரசிகர் பிணையில்

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on பிப்ரவரி 27, 2016

பாகிஸ்தானில் இந்தியக் கொடியை ஏற்றிய விராட் கோலியின் ரசிகரை ஒகாராமாவட்ட கூடுதல்பாகிஸ்தானில் இந்தியக் கொடியை ஏற்றிய விராட் கோலியின் ஆதரவாளர் ஜாமினில் விடுதலை அமர்வு நீதிமன்றம் இன்று சனிக்கிழமை (27) ஜாமினில் விடுதலை செய்துள்ளது. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒகாரா மாவட்டத்தில் வசிக்கும் உமர் டிராஸ் என்ற இளைஞர்  தனது வீட்டின் மொட்டை மாடியில் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று சனிக்கிழமை (27) ஜாமினில் விடுதலை செய்துள்ளது. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒகாரா மாவட்டத்தில் வசிக்கும் உமர் டிராஸ் என்ற இளைஞர்  தனது வீட்டின் மொட்டை மாடியில் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை தோற்கடித்த நாளில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. ‘நான் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் தீவிர ரசிகர். கோலி மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையில் இந்திய கொடியை ஏற்றினேன். மற்றபடி இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது’ என்று அவர் கூறினார்.
இந்த நிலையில் அவர்மீது நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவித்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்;தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.
இந்நிலையில்  சிறையில் அடைப்பட்டிருக்கும் உமர் டிராஸ் சார்பில் அவரது வழக்கறிஞர் ஆமிர் பட்டி ஒகாரா மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 18-ம் திகதி பிணைமனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி அனிக் அன்வர் தள்ளுபடி செய்தார். இதையடுத்து  ஒகாரா மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் புதிதாக ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு மீது நேற்று (26) விசாரணை நடத்திய நீதிபதி அசாதுல்லா சிராஜ் 50 ஆயிரம் ரூபா ரொக்க பிணையில் அவரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: