பின்வரிசை – Pinvarisai

அயோத்தியில் ராமர் கோவில் கட்டக்கோரிய சுப்பிரமணிய சாமி மனு

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on பிப்ரவரி 27, 2016

அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவில் கட்டக்கோரி சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த மனு ஏற்கனவே நிலுவையில் உள்ள அப்பீல் மனுக்களுடன் சேர்த்து விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அயோத்தி ராமர் கோவில்–பாபர் மசூதி தொடர்பான வழக்கை விசாரித்து வந்த அலகாபாத் மேல்நீதிமன்றம்; கடந்த 2010–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பரபரப்பு தீர்ப்பை அளித்தது. சர்ச்சைக்குரிய இடத்தில்  தற்காலிகமாக அமைக்கப்பட்ட ராமர் கோவிலின் மைய மாடத்துக்கு அடியில்தான் ராமர் பிறந்தார் என்றும்இ எனவே அங்கு வழிபட இந்துக்களுக்கு உரிமை உள்ளது என்றும் தீர்ப்பு அளித்தது.
அந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை ஏற்று அலகாபாத் மேல்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம்  இடைக்கால தடை விதித்தது. இடைக்கால தடை நீடிப்பதுடன்  அப்பீல் மனுக்களும் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில்  சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவிலை கட்ட உத்தரவிட வேண்டும் என்று பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி உச்சநீதிமன்றத்தில்  மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:–
உச்சநீதிமன்றத்தில் அப்பீல் மனுக்கள் நீண்ட காலம் நிலுவையில் உள்ளதால் அரசியல் சட்டத்தில்  வழிபாடு மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே உச்சநீதிமன்றம் விரைவில் தலையிட்டு அயோத்தியில் ராமர் பிறந்ததாக கூறப்படும் இடத்தில் இந்துக்கள் கோவிலை மீண்டும் கட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இராமர் எந்த இடத்தில் பிறந்தார் என்பதை தீர்மானிப்பதற்கான அப்பீல் மனுக்களின் மீதான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அங்கு கோவில் கட்ட வேண்டும் என்று கோரும் இந்த மனுவை எப்படி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும்?’ என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.
பிறகுஇ ‘சுப்பிரமணிய சாமியின் மனுவை இடையீட்டு மனுவாக மாற்றி ஏற்கனவே இந்த விஷயம் தொடர்பாக நிலுவையில் உள்ள அப்பீல் மனுக்களுடன் சேர்த்து விசாரிக்கலாம்’ என்று நீதிபதிகள் கூறினர்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: