பின்வரிசை – Pinvarisai

பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 445 இந்தியர்கள்

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on பிப்ரவரி 26, 2016

பாகிஸ்தான் சிறைகளில் 445 இந்தியர்கள் தற்போது அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் மீனவர்கள் என்று மாநிலங்களவையில் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.அவர்களில் பெரும்பாலானவர்கள் மீனவர்கள் என்று மாநிலங்களவையில் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங்  மாநிலங்களவையில் வியாழக்கிழமை (25) எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் சிறைகளில் 392 இந்திய மீனவர்கள் தற்போது அடைக்கப்பட்டுள்ளனர். மற்ற இந்தியர்கள் 53 பேரும் இடைபட்டுள்ளனர். இந்த 445 பேர் தவிர  நமது ராணுவத்தில் இருந்து காணாமல் போன 74 பேரும் கடந்த 1971ஆம் ஆண்டில் இருந்து பாகிஸ்தான் சிறைகளில் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் 54 பேர் போர்க் கைதிகளாவர்.

 இவர்கள் அனைவரையும் விரைவில் விடுதலை செய்து தாயகத்துக்கு திருப்பி அனுப்பும் விவகாரத்தை பாகிஸ்தானிடம் மத்திய அரசு தொடர்ச்சியாக எடுத்துச் சென்ற வண்ணம் இருக்கிறது. போர்க்கைதிகளைப் பொருத்தவரை அவர்கள் தங்கள் நாட்டில் இருப்பதாக பாகிஸ்தான் ஒப்புக் கொள்வதில்லை.
 அன்னிய நாடுகளின் கடல்பகுதிகளில் 1,262 இந்திய மீனவர்கள் கடந்த ஆண்டில் கைது செய்யப்பட்டனர் என்று வி.கே.சிங் தெரிவித்தார்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: