பின்வரிசை – Pinvarisai

வனக்காவலர்கள் கொலை வழக்கு: ஆந்திர சிறையில் இருந்த தமிழர்கள் விடுதலை

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on பிப்ரவரி 24, 2016

திருப்பதி வனத்துறையைச் சேர்ந்த 2 அதிகாரிகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 287 தமிழர்கள் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோயிலுக்கு சாமி கும்பிட பேருந்தில் வந்த தங்களை  திருப்பதி போலீஸார் அழைத்துச் சென்று காவல்நிலையத்தில் தங்க வைத்து கொடுமை செய்ததாக  இன்று (24)  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்வரை  தாங்கள் எதற்காக காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளோம் என்று கூட தெரியாமலும் குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்க முடியாமல் பலரும் தவித்துள்ளனர்.
கடந்த 2013ம் ஆண்டு திருப்பதி வனக்காவலர்களை  செம்மரக் கடத்தலில் ஈடுபட்டிருந்தவர்கள் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து திருப்பதி ரயில் நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிக் கொண்டிருந்த 349க்கும் மேற்பட்டோரை ஆந்திர காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து வழக்குத் தொடர்ந்தனர்.
இவர்களில் 60க்கும் மேற்பட்ட ஆந்திராவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் நீதிமன்றம் பிணை வழங்கியதை அடுத்து அவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்தனர். மீதமிருந்த தமிழர்கள் விசாரணைக் காலம் முழுவதும் கடந்த2 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில்  திருப்பதி வனத்துறை அதிகாரிகள் கொலை வழக்கில் ஆந்திரா சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணை முடிவடைந்த நிலையில்  இன்று (24)  நீதிபதிகள் தீர்ப்பினை வழங்கினர். அதில்  குற்றம்சாட்டப்பட்ட தமிழர்கள் 287 மற்றும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் உட்பட 349 பேரும் விடுதலை செய்யப்படுவதாகவும்  இவர்களுக்கு எதிராக ஆந்திர  மாநில  அரசும்  ஆந்திர காவல்துறையும் தாக்கல் செய்த ஆவணங்கள் போதுமானதாக இல்லை என்றும்  அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
இதன் மூலமாக பொய் வழக்குத் தொடரப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழர்கள் விரைவில் விடுதலையாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: