பின்வரிசை – Pinvarisai

இந்தி நடிகர் சஞ்சய் தத் நாளை விடுதலை

Posted in சினிமா by pinvarisai on பிப்ரவரி 24, 2016

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட இந்தி நடிகர் சஞ்சய் தத்  நாளை வியாழக்கிழமை (25) விடுதலை ஆகிறார்.மும்பையில் கடந்த 1993–ஆம் ஆண்டு நடந்த சங்கிலி தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தின் போது  இந்தி நடிகர் சஞ்சய் தத் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அவருக்கு மும்பை தடா நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.கடந்த 2013–ஆம் ஆண்டு அவரது சிறை தண்டனையை உயர்நீதிமன்றம் 5 ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பு அளித்தது. அவர் ஏற்கனவே 1½ ஆண்டு சிறையில் இருந்த நிலையில்  எஞ்சிய 3½ ஆண்டு சிறை வாசத்துக்காக சரண் அடைந்தார். புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்ட சஞ்சய் தத் பல்வேறு சந்தர்ப்பங்களில் வாய்மொழிஉறுதி மீதான சிறைவிடுபிப்பில் (parole) வெளிவந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு மத்தியில்  நன்னடத்தை அடிப்படையில் சஞ்சய்  தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்று சமீபத்தில் மராட்டிய அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில் சிறை தண்டனை முடியும் 114 நாட்களுக்கு முன்பு  அதாவது வருகிற  25–ஆம் திகதி (நாளை ) அவர் விடுதலை செய்யப்பட இருப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறையில் சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா?
பல்வேறு கை வேலைகள் தெரிந்த பாலிவுட் (Bollywood)  நடிகர் சஞ்சய்  தத்  தனது 5 ஆண்டு கால சிறைத் தண்டனையின் போது சுமார் 38,000 ரூபா சம்பாதித்துள்ளதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏர்வாடா மத்திய சிறைச்சாலையில் நாளை விடுதலையாக உள்ள சஞ்சய் தத் தான் சம்பாதித்த 38 ஆயிரம் ரூபாவை  தனது அன்றாடத் தேவைகளுக்காக செலவிட்டுவிட்டதாகவும்  விடுதலையாகும் போது வெறும் ரூ.450 மட்டுமே அவர் கையில் எடுத்துச் செல்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறையில் 5 ஆண்டு காலம் சிறைத் தண்டனை அனுபவித்த சஞ்சய்  தத்  காகிதப் பைகள் தயாரிப்பில் ஈடுபட்டதாகவும்   அவருக்கு 2015 செப்டம்பர் முதலாம் திகதி வரை ரூ.35 தினக்கூலியாக வழங்கப்பட்டதாகவும் அதன் பிறகு  ரூ.50 தினக் கூலியாக வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறையில் உள்ள கன்டீனில் அவருக்குத் தேவையான பொருட்களை வாங்கவே அவர் தனது ஊதியத்தை செலவிட்டுவிட்டதாகவும் தற்போது அவர் கைவசம் ரூ.450 மட்டுமே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: