பின்வரிசை – Pinvarisai

ராகுல் மீது தேசதுரோக வழக்கு

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on பிப்ரவரி 22, 2016

டெல்லியில் தேச விரோத கோஷங்கள் எழுப்பி சர்ச்சைக்குரிய வகையில் போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தது தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது அலகாபாத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
2013ல் தூக்கிலிடப்பட்ட நாடாளுமன்ற தீவிரவாதி அப்சல்குரு நினைவாக கடந்த 9ம் திகதி டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் துக்க தினம் அனுசரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானை ஆதரித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த போராட்டத்தில் போலீஸ் எடுத்தநடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போராடிய மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். கைதான மாணவர்களை சிறையில் சந்தித்துப் பேசினார்.
இதையொட்டி அலகாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது வக்கீல் சுஷில் குமார் மிஸ்ரா என்பவர் தேச துரோக வழக்கு தொடர்ந்தார்.
இதில் தேசத்திற்கு எதிராக கோஷம் எழுப்பிய மாணவர்களை ராகுல் காந்தி சந்தித்துள்ளார். இதுவும் தேச துரோகம் ஆகும். எனவே இந்திய தண்டனைச் சட்டம் 124வது பிரிவின் கீழ் அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் சுஷில் குமார் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு மார்ச் 1ம் திகதி வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி அளித்தார்.
இதே போல் வாரணாசி நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி. ராஜா மற்றும் ஐக்கிய ஜனதாதளம் தலைவர் கே.சி தியாகி ஆகயோர் மீது தேச துரோக புகார் கூறி மனு தாக்கல் செய்தள்ளார். இந்த மனு மீதான விசாரணை மார்ச் 12ம் திகதி நடைபெறும்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: