பின்வரிசை – Pinvarisai

பாகிஸ்தானிய இந்துக்களுக்கு உதவ முகாம்: ராஜஸ்தான் உத்தரவு

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on பிப்ரவரி 21, 2016

ராஜஸ்தானில் விசா காலம் முடிந்தும் தங்கியுள்ள பாகிஸ்தானை சேர்ந்த இந்து மக்களுக்கு உதவும் வகையில் முகாம் ஒன்றை நடத்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு விட்டு நாடு புலம்பெயர்வோருக்கு உதவும் வகையில் ஏற்படுத்தப்பட்ட சீமந்த் லோக் சாங்தன் (எஸ்.எல் எஸ்.) என்ற அமைப்பின் தலைவர் இந்து சிங் இதனை கூறியுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த இந்து மக்கள் இந்தியாவிற்கு புனித யாத்திரையாக வருவது வழக்கம்.

பாகிஸ்தானில்அந்நாட்டு இந்து மக்கள் மத ரீதியிலான துன்புறுத்தலை சந்தித்து வருகின்றனர். ஆனால் இந்தியாவின் ஹரித்வார் நகருக்கு புனித யாத்திரை மேற்கொள்ள விசா பெறுவது எளிது. அதன்படி அவர்கள் ஹரித்வார் நகருக்கு வருகின்றனர். அதன்பின் ஜோத்பூர் நகருக்கோ அல்லது தங்களது உறவினர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் உள்ள வேறு எந்த நகரத்திற்கோ சென்று விடுகிறார்கள்.
அவர்கள் வேறு நகரங்களுக்கு செல்வதற்கு உரிய விசாக்களை வைத்திருந்தபோதிலும் ஜோத்பூர் நகரில் விசா நீட்டிப்பு கோரி விண்ணப்பிப்பதற்கு சட்டபூர்வ அனுமதியில்லை. பாகிஸ்தானில் வாழும் இந்து மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் நிலையில் ஜோத்பூர் நகரில் தங்குவதற்கு சிலர் விரும்புகின்றனர்.
அதனால் விசா காலம் முடிந்தும் அவர்கள் பாகிஸ்தான் நாட்டிற்கு செல்லாமல் சட்டவிரோத முறையில் இங்கேயே இருக்கின்றனர். இந்நிலையில்இ ஜோத்பூர் நகரில் தங்குவதற்கான விசா காலம் முடிவடைந்த பாகிஸ்தான் இந்து மக்களின் விவகாரம் குறித்து சமீபத்தில் அந்நகருக்கு வருகை தந்த மாநில முதல் மந்திரி வசுந்தரா ராஜேவிடம் எஸ்.எல்.எஸ். அமைப்பு சார்பில் கொண்டு செல்லப்பட்டது.
புலம்பெயர்வோரின் நன்மை கருதி நடந்த இந்த சந்திப்பிற்கு பின்பு அவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி வெளிநாட்டு மண்டல பதிவு அலுவலருக்கு வசுந்தரா ராஜே உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி 3 ஆயிரம் பேர் பலன் பெறுவார்கள் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: