பின்வரிசை – Pinvarisai

தமிழக சினிமாவில் இலங்கைக் கவிஞர் – 50 ஆண்டுகால சாதனை முறியடிப்பு

Posted in சினிமா by pinvarisai on பிப்ரவரி 21, 2016

சினிமாவில் பாட்டு எழுதி பட்டம் பெறுபவர்கள் நிறைய பேர் உண்டு; ஆனால் பாட்டு எழுத வரும்போதே பதக்கத்தோடும் பட்டத்தோடும் வந்திருக்கிறார் இலங்கை தமிழ் கவிஞர் அஸ்மின்.

விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து இசையமைத்த ‘நான்’ படத்தின் “தப்பெல்லாம் தப்பே இல்லை..” என்ற பாடல் தான் அஸ்மினின் முதல் பாடல்.
அவரின் பேட்டியின் சுருக்கம்:
விஜய் ஆண்டனி நடித்த ‘நான்’ படத்திற்காக ஒரு போட்டி நடத்தப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து 20 ஆயிரம் பேர் கலந்துக்கொண்ட அந்த போட்டியில் எனது பாடல் தேர்வு செய்யப்பட்டது. அந்த பாடல் தான் “தப்பெல்லாம் தப்பே இல்லை..” அந்த பாடலின் வெற்றி தான் தற்போது என்னை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பயணிக்கச் செய்கிறது.
நான் படத்திற்குப் பிறகு ஜீவா சங்கர் இயக்கிய ‘அமரகாவியம்’ படத்தில் ஜிப்ரானின் இசையில் “தாகம் தீர கானல் நீரை காதலின்று காட்டுதே” பாடல் எழுதினேன். அப்பhட்டு என்னை விமர்சகர்களிடம் அடையாளம் காட்டியது.
தற்போது நடிகர் காதல் சுகுமார் இயக்கும் ‘சும்மாவே ஆடுவோம்’ படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் “முத்து முத்து கருவாயா” என்ற பாடலையும் அனுப் அரவிந்தன் இயக்கத்தில் “தேன்ல ஊர்ன மிளகாய்” படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளேன்.
மேலும் மணிவண்ணனின் உதவியாளர் முத்துக்குமார் இயக்கும் ‘எந்நேரத்திலும்’ படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதுகிறேன். அதேபோல தாஜ்நூர் மற்றும் வர்சன் இசையில் வெளியாக உள்ள படங்களிலும் ஏ.ஆர்.கே.ராஜராஜா இயக்கும் ‘யாவும் காதலே’ படத்தில் வல்லவன் இசையில் “மர்லின் மன்றோ மகளா நீ மாடர்ன் இரவின் பகலா நீ..” என்ற பாடலை எழுதியுள்ளேன். ‘பேபி டால்’ ‘கருப்புப் பசங்க’ மற்றும் தலைப்பு வைக்கப்படாத பல படங்களில் பாடல்கள் எழுதவும் ஒப்பந்தமாகியுள்ளேன்.
கவிதை வேறு பாடல்கள் வேறு என்பதை நானும் அறிவேன். எனக்கு கொடுக்கப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப இயக்குநர்களும் இசையமைப்பாளர்கள் எதிர்ப்பார்க்கும் வரிகளை கொடுப்பேன். அது கவித்துவமாக இருந்தாலும் சரி எதார்த்தமாக இருந்தாலும் சரி. அனைத்து ரகமான பாடல்கள் எழுத வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.
விடை தேடும் வினாக்கள் விடியலின் ராகங்கள் பாம்புகள் குளிக்கும் நதி ஆகிய மூன்று கவிதை தொகுப்புகளை எழுதியிருக்கிறேன். இதில் பாம்புகள் குளிக்கும் நதி புத்தகத்திற்கு கவிஞர் வைரமுத்துவும் பா.விஜயும் வாழ்த்துரை எழுதியிருக்கிறார்கள்.
எனது மரபுக்கவிதைகளில் ஒரு தேர்ந்த கவிஞனுக்குரிய திறன் தெரிகிறது என்று வைரமுத்து பாராட்டியுள்ளார். நான் மானசீக குருவாக நினைக்கின்ற வைரமுத்து அவர்கள் என்னை பாராட்டியது எனக்கு கூடுதலாக ஒரு விருது கிடைத்ததற்கு சமம். இயக்குநர் லிங்குசாமியும் எனது கவிதைகளை படித்து விட்டு பாரட்டியுள்ளார். சொல்ல போனால் அவர் எனது கவிதைகளுக்கு ரசிகராக இருக்கிறார். சமீபத்தில் கூட என்னை அழைத்து கவிதை குறித்து பேசினார்.
கடந்த 50 வருடங்களுக்கு முன்பு ஜெமினி கணேசன் நடிப்பில் வெளியான ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’ படத்தில் ஈழத்து ரத்தினம் என்பவர் பாடல் எழுதினார். அதன் பிறகு 50 ஆண்டுகள் கழித்து ஈழ மண்ணில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் பாடல் எழுதுவது நான் தான். தற்போதும் இலங்கை தமிழர்கள் சினிமாவில் பாடல்கள் எழுதுகிறார்கள். ஆனால் அவர்கள் Nநார்வே உள்ளிட்ட புலம் பெயர்ந்த தமிழர்களாகவே இருக்கிறார்கள்.
ஆனால் ஈழ மண்ணில் இருந்து நேரடியாக தமிழ் சினிமாவுக்கு பாடலாசிரியராக வந்திருப்பது நான் தான். எனது நான் படத்திற்குப் பிறகு நான் எழுதிய இரண்டாவது பாடலான அமரகாவியம் படத்தின் பாடலுக்கு எடிசன் விருது வழங்கப்பட்டது.
இப்படி உற்சாகமாக நம்மிடம் தனது பாடல் பயணத்தை பகிர்ந்துக்கொண்ட அஸ்மின் தற்போது இருப்பது இலங்கை மட்டக்களப்பு என்றாலும் அவரது தாத்தாவுக்கு சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினமாம்.
தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி இலங்கையில் தயாராகும் தமிழ்ப் படங்களுக்கும் ஏகப்பட்ட பாடல்களை எழுதியுள்ள அஸ்மின் டாப் பாடலாசிரியர். பாடலோடு நின்றுவிடாமல் இலங்கையில் பிரபல தொலைக்காட்சியான வசந்தம் டிவி-யில் சிறந்த நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.
(ஜெ.சுகுமார்)
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: