பின்வரிசை – Pinvarisai

ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புக்கு கடும் நிதிநெருக்கடி

Posted in அலசல் by pinvarisai on பிப்ரவரி 20, 2016

பெய்ரூட்: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதனால் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு பாதி சம்பளமே வழங்கப்படுவதோடு சலுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேற்கு ஆசிய நாடுகளான சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து உலகையே அச்சுறுத்தி வருகின்ற ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு. இணையதளம் மூலம் விளம்பரம் செய்துபணம் மற்றும் பெண் ஆசை காட்டி பல நாடுகளைச் சேர்ந்த வாலிபர்களை தங்கள் அமைப்புக்கு சேர்த்து வருகிறது; அவர்களுக்கு பயங்கரவாத பயிற்சியும் அளிக்கிறது.
இவ்வாறாக பயிற்சி பெற்றவர்கள் மூலம் சிரியா மற்றும் ஈராக் உள்ளிட்ட பல நாடுகளில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வருகிறது. இந்த அமைப்பு பயங்கரவாத தாக்குதல்களுக்கு சிறுவர்களையும் பயன்படுத்தி வருகிறது.
சிரியாவில் ரக்கா உட்பட்ட சில நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்த அமைப்பினர் அந்த நகரங்களில் பிரத்தியேக கரன்சியை அறிமுகப்படுத்த முடிவு செய்தனர். இந்நிலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளின் ராணுவத்தினர் சிரியாவில் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலாலும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைக்காத வகையில் பல நாடுகள் எடுத்த நடவடிக்கையாலும் ஐ.எஸ். அமைப்பு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதனால் நிறைய சம்பளம் சலுகைகள் மற்றும் போனஸ் தரப்படும் என கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு தங்கள் அமைப்பில் சேர்க்கப்பட்ட பயங்கரவாதிகளுக்கு அவற்றை நிறைவேற்ற முடியாத நிலை உருவாகி உள்ளது.
முக்கிய காரணம் என்ன?
சர்வதேசசந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடும் நிதி நெருக்கடியை சந்திப்பதற்கான முக்கிய காரணமாகும். மேலும் அமெரிக்க படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருந்த எண்ணெய் வளங்கள் வினியோகம் செய்யும் குழாய்கள் நாசமாகிவிட்டன. அத்துடன் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதை ஈராக் அரசு நிறுத்தியதும் நிதி நெருக்கடிக்கு காரணமாகும்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: