பின்வரிசை – Pinvarisai

இந்திய இளைஞர்களை ஈர்க்க ஐ.எஸ் இயக்கம் முயற்சி

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on பிப்ரவரி 3, 2016

சிரியாவிலும் ஈராக்கிலும் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் தற்போது இந்தியாவில் உள்ள முஸ்லீம் இளைஞர்கள் தங்கள் அமைப்பில் சேர்க்க முயற்சித்து வருகிறது என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த முயற்சியை தடுக்க முஸ்லீம் மத குருமார்களை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த புதன்கிழமை சந்தித்தார். ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் அதிக அளவில் இந்திய பாகிஸ்தான் முஸ்லீம் இளைஞர்கள் சேர்ப்பதற்கு முயற்சித்து வருகிறது.
இந்த முயற்சியை தடுப்பதற்கு முஸ்லீம் மத குருமார்களின் ஒத்துழைப்பு தேவை என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த சந்திப்பின்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
அவர்கள் மத்திய கிழக்கு நாட்டை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கைகளையும் அந்த அமைப்பு இந்திய இளைஞர்களை தங்களுடன் சேர்க்க தூண்டுவதையும் மத குருமார்களிடம் விளக்கி கூறினர்.
தீவிரவாத இயக்கத்தின் பக்கம் இந்திய இளைஞர்கள் போய்விடாமல் இருப்பதற்கு முஸ்லீம் மத குருமார்களின் ஒத்துழைப்பு தேவை என்றும் அதற்கான அனைத்து உதவிகளையும் அரசு அளிக்கும் என்றும் ராஜ்நாத் தெரிவித்தார்.
தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்களை சேர்ப்பதற்கு சமூக ஊடகங்கள் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் குறித்து முஸ்லீம் மத குருமார்களை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முதன் முறையாக தற்போது சந்தித்துள்ளார்.
கடந்த 15நாட்களாக உள்துறை அமைச்சர் மத்திய புலனாய்வு துறையின் உயர் அதிகாரிகளையும் 13மாநில போலீஸ் அதிகாரிகளையும் சந்தித்து பேசினார்.
அப்போது ஐ.எஸ் .ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க நடவடிக் கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சமூக ஊடகங்கள் மற்றும் இதர வழிகளில் இந்திய முஸ்லீம் இளைஞர்களை ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் ஈர்த்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தவே இந்திய அரசு தற்போது கடும் நடவடிக் கை எடுத்து வருகிறது.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: