பின்வரிசை – Pinvarisai

ராமருக்கு எதிராக விசித்திர வழக்கு பீகார் நீதிமன்றால் தள்ளுபடி

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on பிப்ரவரி 2, 2016

சீதையை காட்டுக்கு அனுப்பிய ராமர் மற்றும் லட்சுமணன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரி பீகார் மாநிலத்திலுள்ள நீதிமன்றம் ஒன்றில் வழக்கறிஞர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட விசித்திரமான மனுவை நீதிமன்றம் நேற்று செவ்வாய்கிழமை தள்ளுபடி செய்தது என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

ராமரின் மனைவியான சீதா முன்னர் ஜனகபுரியை ஆட்சி செய்த ஜனக மகாராஜாவின் மகளாக மிதிலை நகரில் பிறந்ததாக புராணங்களில் காணப்படுகிறது.
அந்த பழங்கால மிதிலை நகர் தற்போதையை பீகார் மாநிலத்தில் உள்ள சீதாமாரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சீதையின் நினைவாகவே இந்த மாவட்டத்துக்கு பிற்காலத்தில் இந்த பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க வனவாசம் முடிந்து அயோத்திக்கு திரும்பி ஆட்சிப்பொறுப்பை ஏற்ற ராமர் அயோத்தியின் குடிமக்களில் ஒருவன் இராவணனால் சீதை கடத்திச் செல்லப்பட்டது தொடர்பாக ‘ஒருவிதமாக பேசியதை அறிந்து சீதையைக் காட்டுக்கு அனுப்பினார்.
அப்போது சீதை கருவுற்றிருந்தாள். காட்டில் சீதை வால்மீகி முனிவரின் ஆதரவில் வாழ்ந்து வந்தாள். அங்கு சீதைக்கு லவன் குசன் என இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் வால்மீகியின் ஆசிரமத்திலேயே வளர்ந்தனர்.
இராமர் தனது பேரரசை மேலும் விரிவாக்கும் நோக்குடன் அசுவமேத யாகம் எனப்பட்ட யாகத்தை ஒழுங்கு செய்தார்.. இந்த யாகத்தைச் செய்யும் ஒரு மன்னன் ஒரு குதிரையைப் பெரும் படையோடு அண்டை நாடுகளுக்கு அனுப்புவான். அவனுடன் போரிடமுடியாமல் அடிபணிய விரும்பும் அரசர்கள் அக்குதிரையைத் தமது நாட்டில் உலவ விடுவர். அப்படியின்றி அவ்வரசன் அடிபணிய விரும்பாவிட்டால் குதிரையைப் பிடித்துக் கட்டிவிடுவான்.
குதிரையை அனுப்பிய அரசன் போர் புரிந்து குறிப்பிட்ட நாட்டைத் தோற்கடிக்கவேண்டும். இராமன் அனுப்பிய குதிரை அவனது பிள்ளைகளான லவனும் குசனும் வாழ்ந்த காட்டில் உலவியபோது அவர்கள் அதனைப் பிடித்துக் கட்டியதுடன் அதனுடன் வந்த படையினருடன் மோதி அவர்களைத் தோற்கடித்தனர்.
இதைக் கேள்வியுற்ற இராமர் காட்டுக்கு வந்து தனது பிள்ளைகளையும் சீதையையும் கண்டார். சில காலத்தின் பின் புவியில் தனது காலம் முடிவுக்கு வருவதை உணர்ந்த சீதை தன்னை ஏற்றுக்கொள்ளும்படி பூமித்தாயை வேண்டினாள். சீதையின் வேண்டுகோளுக்கு இணங்கிப் பூமியும் பிளந்து அவளை ஏற்றுக்கொண்டது. பின்னர் லவனும் குசனும் தந்தை ராமனுடன் அயோத்திக்குச் சென்று வாழ்ந்தனர் என்று லவகுசா கதைகளில் கூறப்படுகிறது.
இந்நிலையில் சீதையை காட்டுக்கு அனுப்பிய ராமர் மற்றும் அவரது தம்பி லட்சுமணன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தன் குமார் சிங் என்பவர் சீத்தாமரி மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அவரது இந்த செயல் இந்து மக்களின் மதநம்பிக்கையையும் மனங்களையும் காயப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக சந்தன் குமார் சிங்குக்கு எதிராக சீதாமரி மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் மூன்று பேர் புகார் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
சீதையை காட்டுக்கு அனுப்பிய ராமர் மற்றும் அவரது தம்பி லட்சுமணன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென சந்தன் குமார் சிங் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சீதாமரி மாவட்ட தலைமை நீதிபதி ராஷ் பிஹாரி இந்த மனுவில் உளவியல் மற்றும் உண்மைக்கு மாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதால் இதை விசாரணைக்கு உகந்தது அல்ல என கருதி தள்ளுபடி செய்கிறேன் என தெரிவித்தார்.
இதற்கிடையேஇ இந்த வழக்கை தொடர்ந்த நாளில் இருந்து இடதுசாரி இயக்கத்தினரிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும்இ இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட்டை சந்தித்து தனக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப் போவதாகவும் சந்தன் குமார் சிங் கூறியுள்ளார்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: