பின்வரிசை – Pinvarisai

விடுதலைப்புலிகளின் பிரதானி எனப்படும் எமில் காந்தன் மீதான பிடியாணை வாபஸ்

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on பிப்ரவரி 1, 2016

விடுதலைப்புலிகளின் சர்வதேச நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படும் எமில் காந்தன் மீது விதிக்கப்பட்டிருந்த சிவப்பு ஆணை மற்றும் பிடியாணை என்பவற்றை விலக்கிக்கொள்ள கொழும்பு சிறப்பு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை தீர்மானித்துள்ளது.

கொழும்பு சிறப்பு நீதிமன்ற ஆணையாளர் ஐராங்கனி பெரேரா இதற்கான அனுமதியை வழங்கினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் நிதி கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவத்தில் பிரதான இடத்தை எமில் காந்தன் வகித்துள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
மன்றில் முன்னிலையான எமில் காந்தனின் சட்டத்தரணி தமது சாட்சிக்காரர் இலங்கைக்கு வந்து சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.
எனினும் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள சிவப்பு ஆணை மற்றும் பிடியாணை என்பன இதற்கு தடையாக இருப்பதாகவும் சட்டத்தரணி தெரிவித்தார்.
இதனையடுத்தே நீதிமன்ற ஆணையாளர் எமில் காந்தன் மீது விதிக்கப்பட்டிருந்த சிவப்பு ஆணை மற்றும் பிடியாணைகளை விலக்கிக்கொள்ளும் தீர்ப்பை அறிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இரகசிய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் பிரதானமாக கூறப்பட்டவர் எமில் காந்தன்.
2005ம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ச இருந்தார்.
அத்தேர்லில் தமிழ் மக்கள் வாக்களிப்பதை தடுப்பதற்காக விடுதலைப்புலிகளுக்கு பசில் ராஜபக்சவினால் பணம் வழங்கப்பட்டது என செய்திகள் வெளிவந்திருந்தன.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மகிந்தவுக்கும் இரகசிய ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட்டதாகவும்-
மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்ச மூலமாக தேர்தலுக்கு முன்பாக பலகோடி ரூபா வழங்கப்பட்டதாகவும் இதற்கு எமில் காந்தன் அனுசரணையாக இருந்ததாகவும் கூறப்பட்டு வந்தது.
தேர்தலுக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக எமில் காந்தனால் உருவாக்கப்பட்ட போலி வர்த்தக நிறுவனங்களுக்கு 760 மில்லியன் ரூபா தொகைக்கான வீடமைப்புத் திட்டங்களுக்கு மகிந்த அரசாங்கம் ஒப்புதல் அளித்தது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எமில் காந்தனுக்கு பணம் கொடுத்ததாக டிரான் அலெஸ் மற்றும் “மௌபிம” நாளிதழின் நிதித்துறை இயக்குநர் துசந்த பஸ்நாயக்க ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். பயங்கரவாத தடுப்பு திணைக்களம் மற்றும் குற்றத் தடுப்பு திணைக்களத்தினரின் விசாரணைகளில் எமில் காந்தன் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர் எனக் கூறப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர் என கூறப்பட்ட காந்தனுக்கு பணம் கொடுத்தமை தொடர்பாக பயங்கரவாத தடுப்பு திணைக்களத்தினரால் டிரான் அலெஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளில் எமில் காந்தன் 2006 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி நாட்டில் இருந்து வெளியேறி இதுவரை மீண்டும் நாடு திரும்பவில்லை என அறியவருகிறது.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: