பின்வரிசை – Pinvarisai

திருப்பதி கோவில் தரிசன டிக்கெட் விலை உயருகிறது

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on பிப்ரவரி 1, 2016

திருப்பதி கோவிலில் பல்வேறு தரிசனங்களுக்கான டிக்கெட் விலை உயருகிறது. மேலும் சிறப்பு கட்டண சேவைக்கு வழங்கப்படும் 2 இலவச லட்டு பிரசாதத்தை நிறுத்த சிறப்புக்குழு தெரிவித்த யோசனையை திருப்பதி தேவஸ்தானம் அமல்படுத்தவுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். பக்தர்களின் உண்டியல் காணிக்கை மூலமே தினமும் 2 கோடிக்கு அதிகமான வருமானம் வருகிறது. இந்த நிலையில் கோவிலில் செலவை குறைத்து வருமானத்தை பெருக்குவது குறித்த ஆலோசனை வழங்க சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு அளிக்கும் பரிந்துரைபடி இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்படும். இந்த சிறப்பு குழு தனது பரிந்துரை அறிக்கையை தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி சாம்பசிவராவிடம் கடந்த வியாழக்கிழமை வழங்கியது.
இந்த சிறப்பு குழு 300 ரூபாய் தரிசன டிக்கெட் கட்டணத்தை ரூ.500 ஆக உயர்த்த பரிந்துரை செய்தது. இதற்கு சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ரூ.400 ஆக குறைக்கப்பட்டது. மேலும் ஒரு டிக்கெட்டுக்கு இலவசமாக வழங்கும் லட்டு பிரசாதத்தையும்இ சிறப்பு கட்டண சேவைக்கு வழங்கப்படும் 2 இலவச லட்டு பிரசாதத்தை நிறுத்தவும் யோசனை தெரிவித்து உள்ளது.
இதற்கு பதிலாக ரூ.25 விலையில் கூடுதல் லட்டு கொடுக்க முடிவு செய்து உள்ளது. வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டை ரூ.500–ல் இருந்து ரூ.800 ஆக உயர்த்தவும்இ சுப்ரபாத சேவை டிக்கெட்டை ரூ.240–ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தவும்இ தோமாலை அர்ச்சனை டிக்கெட் ரூ.440–ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தவும் முடிவு செய்து உள்ளது.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: