பின்வரிசை – Pinvarisai

ஷிர்க் ஒழிப்பு மாநாடு தடை கோரிய மனு தள்ளுபடி

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on ஜனவரி 31, 2016

தமிழ்நாட்டின் திருச்சியில் ஜனவரி 31 ஆம் மாநில அளவிலான ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ ஒன்றை நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இறைவன் ஒருவனே என்கிற முழக்கத்துடன் திட்டமிடப்பட்டுள்ள இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ நடத்த தடை விதிக்க வேண்டுமென தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் சுலைமான் மன்பை என்பவர் சென்னை மதுரை மேல்நீதினமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்துள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி இம்மாநாடு மத துவேசத்தையோ மத கலவரத்தை தூண்டும் விதமாகவோ நடைபெற கூடிய மாநாடு அல்ல எனவும்-
.
சில இஸ்லாமியர்களிடத்திலே இருக்க கூடிய பிணவழிபாடு தர்கா தகடு போன்ற மூட நம்பிக்கைகளை விட்டு விலக்குவதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார் என்று தவ்ஹீத் ஜமாத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை மாற்றுத் தரப்பினர் பின்வரும் கருத்தைத் தெரிவிக்கின்றனர்-
தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ என்பது சிலை வழிபாட்டு முறைகளை ஒழித்து ‘தூய இஸ்லாம்’ திசையை நோக்கி தமிழ் முஸ்லிம்களை கொண்டு செல்லும் முயற்சி.
வஹாபிசம்இ சலஃபிசம் போன்ற தீவிர சுன்னி இஸ்லாம் சிந்தனைகளின் விளைவுதான் இது. இந்த கோட்பாட்டை ஒட்டிதான் பாமியான் புத்தர் சிலைகளை தாலிபான்கள் வெடித்து நொறுக்கினார்கள்.
இதே கோட்பாட்டை ஒட்டிதான் ஐஎஸ்ஐஎஸ் கும்பல் சிரியா மற்றும் ஈராக் போன்ற தேசங்களில் உள்ள பழமையான இஸ்லாம் அல்லாத வரலாற்றுச் சின்னங்களை அழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இது மற்ற மதங்களுக்கு மட்டும் பிரச்சனை அல்ல. இந்த சிந்தனையாளர்கள் சூஃபிசம் மற்றும் ஷியா போன்ற இஸ்லாத்தின் உள்ளேயே இருக்கும் பிரிவுகளைக் கூட வெறுக்கிறார்கள்.
சூஃபி நம்பிக்கையாளர்கள் வழிபடும் தர்கா எனப்படும் இஸ்லாமிய துறவிகளின் சமாதிகள் கூட இந்த ‘ஷிர்க் ஒழிப்பின்’ கீழ் வரும். பாகிஸ்தானில் நிறைய பழமையான தர்காக்கள் அடித்து நொறுக்கப் பட்டதற்கும் இதே சிந்தனைதான் பயன்பட்டது.
இதே திசையை நோக்கி தமிழ் முஸ்லிம்களை திருப்பும் ஜமாஅத்-தின் இந்த முயற்சி கவலையையும் பயத்தையும் உண்டு பண்ணுகிறது.
பெரும்பான்மையாக முஸ்லிம்கள் மட்டுமே உள்ள தேசங்களிலேயே இந்த சிந்தனை கடும் வன்முறைகளை விளைவித்திருக்கிறது என்றால் இந்தியா மாதிரி தெருவுக்கு தெரு பத்து சிலைகளை வைத்து கும்பிட்டுக் கொண்டிருக்கும் தேசங்களில் எப்பேர்ப்பட்ட மத துவேஷங்களை இது உண்டு பண்ணும் என்று கற்பனை செய்யவே முடியவில்லை.
‘நாங்கள் தூய இஸ்லாத்தை பின்பற்றி உருவமில்லா இறைவனை மட்டுமே வழிபடுவோம்.’ என்று பிரகடனப் படுத்தும் உரிமை இந்த தீவிர சுன்னிகளுக்கு உண்டு. ஆனால் அதை உறுதி செய்ய அடுத்தவர் தர்காக்கள் கோயில்கள் கிருச்சபைகள் ஆகியவற்றை உடைப்போம் என்று கிளம்புவது ஆபத்தானது.
இந்த வகாபிச சிந்தனைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய கடமை அரசுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு தமிழ் முஸ்லிம்களுக்கும் இருக்கிறது. இது மாற்றுத்தரப்பினரின் வாதம்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: