பின்வரிசை – Pinvarisai

இந்திய மீனவர்கள் 9 பேர் கைது

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on ஜனவரி 31, 2016

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாண குடாநாட்டின் தீவுகளில் ஒன்றான அனலைதீவுக்கு அண்மிய கடற்பரப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (31) அதிகாலை 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரியொருவர் கூறினார்.

இந்திய ஜகதாபட்டினம் பகுதியைச் சேர்ந்த இந்த மீனவர்கள் இரு படகுகளில் வந்து மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீனவர்களை கடற்படையினரிடமிருந்து பொறுப்பேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கடலுக்குள் மீன்பிடிக்கச்சென்ற புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 9 பேரை இலங்கை கடல்படையினர் சனிக்கிழமை நள்ளிரவில் கைது செய்தனர் என்று இந்தய செய்திகள் தெரிவித்தன.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 900 பேர் 241 விசைப்படகுகளில் சனிக்கிழமை அதிகாலையில் மீன்பிடிக்கச் சென்றனர்.
வழக்கம் போல இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது நெடுந்தீவு பகுதிக்கு நள்ளிரவில் வந்த இலங்கை கடல்படையினர் அங்கு ஜெகதாப்பட்டினம் கலைமதி என்பவருக்குச் சொந்தமான படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த-
ச. விக்னேஷ்(23) ரா. பழனி(45) பா. மணிகண்டன்(23) ம. செல்வநாதன்(35) ரா.திலீப்(24) ஆகிய 5 பேர்;
கோட்டைப்பட்டினம் ஜான்பீட்டர் என்பவரது படகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ரா. கோட்டைச்சாமி(37) ரூ. மெரிகன்(19) சி. ஜெமினி(44) ம. பரமசிவம்(42)-
ஆகிய 4 பேர் உள்பட்ட மொத்தம் 2 படகுகளில் இருந்த 9 மீனவர்களையும் படகுடன் கைது செய்து இலங்கைக்குக் கொண்டு சென்றனர் என அச்செய்திகள் தெரிவித்தன.
இதனிடையே கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர் எனவும் அவை குற்றம் சுமத்தின.
ராமேஸ்வரக்கைச் சேர்ந்த சுமார் 3000 மீனவர்கள் 200 படகுகளில் கச்சத் தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்கள் மீது கற்களைக் கொண்டுத் தாக்குதல் நடத்தினர் எனவும்
மேலும் மீனவர்களின் வலையையும் அறுத்து எறிpந்தனர் எனவும் இதனால் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் கரை திரும்பினர் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: