பின்வரிசை – Pinvarisai

விஜயகாந்தின் ‘தூ’: விசாரணை நடத்த உத்தரவு!

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on ஜனவரி 30, 2016

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பத்திரிகையாளர்கள் மீது துப்பினார் என்று கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜயகாந்த் கடந்த டிசம்பர் 27-ம் திகதி சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றினால் அவர்ஆத்திரமடைந்தார். அக்கேள்விக்கு பதில் அளிக்காமல் பத்திரிகையாளர்களை பார்த்து ‘தூ..’ என்று துப்பினார் என்று கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேவராஜன் என்ற பத்திரிகையாளர் இந்த விவகாரம் தொடர்பாக விஜய்காந்துக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வலியுறுத்தி காவல்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பினார். ஆனால் காவல்துறையினர் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது தொடர்பாக அவர் சென்னை மேல்நீதிமன்றத்தில் விஜயகாந்த் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கை கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பையா இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவே தெரிகிறது என்றும் எனவே காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கு பதிவு செய்ய போதுமான முகாந்திரம் இல்லையெனில் இது குறித்தும் புகார்தாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: