பின்வரிசை – Pinvarisai

நில மோசடி: ரஜினிக்கு அழைப்பாணை

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on ஜனவரி 30, 2016

சுப்பர் ஸ்டர் ரஜினிகாந்தின் மனைவி லதா நடத்தி வரும் ‘தி ஆஸ்ரம் மெட்ரிக்குலேசன்’ பள்ளியின் நிலம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக ரஜினிகாந்த் மற்றும் மனைவி லதா ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி ஆஸ்ரம் மெட்ரிக்குலேசன் பள்ளியின் நிலம் தொடர்பாக சென்னை மேல்நீதிமன்றத்தில் வெங்கடேசவரலு என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்து மேல் நீதிமன்றம் கடந்த நவம்பர் 18-ந் திகதி பிறப்பித்த உத்தரவில்-
‘மனுதாரர் வெங்கடேசவரலு மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனரிடம் நிலம் தொடர்பாக புகார் செய்யலாம் என்றும்-
அவ்வாறு புகார் செய்யும் பட்சத்தில் அதை சட்டப்படி 8 வாரத்துக்குள் விசாரித்து மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குனர் தகுந்த உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் கல்வித்துறை அதிகாரியிடம் வெங்கடேசவரலு புகார் செய்தார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக தி ஆஸ்ரம் மெட்ரிக்குலேசன் பள்ளியை நிர்வகிக்கும் ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கத்தின் செயலாளர் லதா நிர்வாக அறங்காவலர் ரஜினிகாந்த் ஆஸ்ரம் பள்ளியின் முதல்வர் ஆகியோர் ஜனவரி 25-ஆம் திகதி நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க வேண்டும் என்று கடந்த 12-ஆம் திகதி தமிழ்நாடு மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இணை இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தி ஆஸ்ரம் பள்ளியின் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. லதா ரஜினிகாந்த் ஆகியோர் நேரில் ஆஜரகும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யும்படி அதில் மனுதாரர்கள் கோரியிருந்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நேரில் ஆஜராகவேண்டும் என்று இணை இயக்குனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என்றும்-
. ரஜினி, லதா மற்றும்பள்ளி முதல்வர் வந்தனா ஆகியோர் 2 வாரத்துக்குள் இணை இயக்குனர் முன்பு ஆஜராகி தங்கள் பள்ளி நிலம் குறித்து எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கவேண்டும் என்றும்-
அவ்வாறு விளக்கம் அளித்த பின்னர் 8 வாரத்துக்குள் சட்டப்படி தகுந்த உத்தரவை மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இணை இயக்குனர் பிறப்பிக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டுள்ளார்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: