பின்வரிசை – Pinvarisai

நான் பௌத்த புத்திரன்! சிறையில் இருந்து ஞானசார தேரர்

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on ஜனவரி 30, 2016

உண்மையான குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் நிலையில் நாட்டை நேசிக்கும் எம்மை போன்றவர்களை தண்டித்து சிறையில் அடைத்து விட்டது Image result for gnanasara arrestedஇந்த நல்லாட்சி அரசாங்கம் என்று கைது செய்யப்பட்டுள்ள கலகொட அத்தே ஞான சார தேரர் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது-
நான் எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டில் இனவாதத்தை உருவாக்கும் வகையிலோ அல்லது மதங்களை கொச்சைப்ப-டுத்தும் வகையிலோ ஒரு போதும் நடந்து கொண்டதில்லை.
நான் இந்த நாட்டின் பௌத்த புத்திரனாகவே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நடந்துள்ளேன். எனக்கு எதிராக கடந்த ஜனவரி 26ஆம் திகதி நீதிமன்ற பிடியாணை வந்ததும் நான் நீதிமன்றத்தை நாடிச் சென்றேன். அப்போது என்னை கைதுசெய்¬தனர். என்னை சிறையில் அடைத்த பின்னர் எனக்காக வாதாட சட்டத்தரணி ஒருவரைக்கூட அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டனர்.
சட்டத்தை நாடும் எந்தவொரு தனி மனிதனுக்கும் தான் ஒரு சட்டத்தரணியை நாடும் உரிமை உள்ளது. ஆனால் எனது விடயத்தில் அதுவும் மறுக்கப்பட்டுள்ளது. நாம் எப்போதும் நாட்டின் மீது மரியாதையும் பற்றும் வைத்துள்ளதை போலவே நாட்டின் சட்டம் மீதும் அதிக மதிப்பு வைத்துள்ளோம். அந்த சட்டத்துக்கு கட்டுப்பட்டு செயற்பட நாம் விரும்புகிறோம்.
இலங்கையின் வராலற்றில் எந்த சந்தர்பத்திலும் பெளத்த பிக்குவின் உரிமையையும் அவர் மீதான மதிப்பையும் மீறும் வகையில் எந்தவொரு சம்பவமும் நடைபெற்றதில்லை.
ஆனால் இன்று அவை முழுமையாக மீறப்பட்டுள்ளது. இன்று நாட்டை ஆளும் “கறுப்பு வெள்ளையர்கள்” நாட்டின் சுயாதீன சட்டத்தை மீறி எமது புனிதத்துவத்தை அவமதிப்பதற்கு ஒப்பான செயலை செய்துவிட்டனர்.
இந்த நாட்டை ஆக்கிரமித்த மேற்கத்தேய வாதிகளிடம் இருந்து இந்த நாட்டை போராடி மீட்டெடுத்தது இந்த நாட்டில் சிங்கள பெளத்த கொள்கையை கட்டிக்காf;;கவேயாகும். அதேபோல் fம்யூனிச ஆக்கிரமிப்பிலான நாட்டை உருவாக்க ஜே.வி.பி யும் தமிழ் ஆக்கிரமிப்பை உருவாக்க விடுதலைப் புலி¬களும் உருவெடுத்த போதும் நாட்டை காப்பாற்ற, மீட்டெடுக்க சிங்களவர்கள் முன்னின்றனர்.
இப்போது முஸ்லிம் ஆக்கிரமிப்பை மேற்கொள்ள நடக்கும் முயற்சிகளையும் எமது சிங்களவர்கள் கவனத்தில் கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.
அதற்குக் காரணம் எம்மைப் போன்ற நாட்டை நேசிக்கும் நபர்களின் துணிவும் சிந்தனையுமேயாகும். நாட்டை நேசிக்கும் எம்மை போன்றவர்களை தண்டித்து சிறையில் அடைத்து விட்டு உண்மையான பயங்கரவாதிகளை சுதந்திரமாக வெளியில் நடமாட விட்டுள்ளனர்.
ஒரு பௌத்தனாக எனது வேலையை நான் சரியாக செய்து வந்துள்ளேன். நான் அச்சமின்றி நாட்டுக்காகவும் பௌத்தத்துf;fhகவும் குரல்கொடுத்து வந்துள்ளேன். நான் இன்று செய்த தவறு என்ன? நான் நாட்டை பிரிக்க செயற்பட்டேனா? இன்றைய மக்கள் பிரதிநிதிகளை போல ஊழல் மோசடிகளை செய்து நாட்டை சீரழித்தேனா? அவ்வாறு எதையும் செய்யாத என்னை தனிப்பட்ட வகையில் பழிவாங்கியிருப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு விடயமாகும்.
நான் நீதிமன்றத்தில் கதைத்தது நீதிமன்றை அவமதித்த செயலென கூறியே என்னை சிறையில் அடைத்தனர். நான் எனது அமைப்பின் மூலமாக நாட்டை பிரிப்பதாகவும் குழப்பகாரமான சூழலை உருவாக்குவதாகவும் குற்றம் சுமத்தி ஆட்சியாளர்கள் என்னை விமர்சித்து வருகின்றனர்.
சாதாரணம் தொடர்பில் நான் கதைத்தமையே இன்று குற்றமாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு மூலமே தனி மனிதனின் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து வெளியிடும் சுதந்திரம் cWjpg;படுத்தப்பட்டுள்ளது. எனினும் ஆட்சியாளர்கள் தமது அதிகாரத்தை தக்கவைக்கும் நோக்கத்தில் பேச்சு சுதந்திரத்தை தடை செய்து மனிதர்களின் கருத்துக்கு எதிராக நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்.
அதேபோல் பிரகீத் எக்னெலிகொடவின் மரணம் ஒரு அநியாயம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அவர் புலிகளின் உறுப்பினரோ அல்லது சர்வதேச நாடுகளுக்கு துணைபோனவரோ எவராக இருந்தாலும் அவரை கொலை செய்ய எவருக்கும் உரிமை இல்லை. ஆனால் எமக்கு இருக்கும் கேள்வி என்னவெனில் பிரகீத்தின் மரணத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஏன் ரோகன விஜய¬வீர,காமினி திசாநாயக போன்றவர்கள் கொல்லப்பட்டமைக்கும் பல அப்பாவிகள் கொல்லப்பட்டமைக்கும் கொடுக்கப்படவில்லை.
அதேபோல் ஹிருணிக்கா போன்றவர்கள் சட்டத்தில் கட்டுப்படாத நிலையில் எம்மைப்போன்றவர்கள் மட்டும் தண்டிக்கப்படுவது ஏன். இந்த மாதிரியொரு நல்லாட்சி தொடர்ந்தால் நாட்டில் அப்பாவிகள் மாத்திரம் தண்டிக்கப்பட்டு வருவார்கள். இப்போதாவது பெளத்த உரிமைகளை பாதுகாக்க வேண்Lk;; பிக்குகளின் உரிமைகளை பாதுகாக்கக் வேண்டும்.
இப்போதும் நான் சட்டத்தின் மீதும் சுயாதீனத்தின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளேன். எமது பெளத்த சிங்கள தேசம் கட்டிக்காக்கப்பட வேண்டும். அந்த நம்பிக்கையில் நான் இருக்கின்றேன் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: