பின்வரிசை – Pinvarisai

தமிழர் கொலை விவகாரம்: விசாரணை குழு மீது கண்டனம்

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on ஜனவரி 30, 2016

திருப்பதியில் 20 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆந்திரா விசாரணை குழுவுக்கு ஐதராபாத் மேல்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பதி சேஷாசல மலை வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்தல்காரர்கள் மீது ஆந்திர போலீசார் நடத்திய என்கவுண்டரில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் அப்பாவி கூலித் தொழிலாளர்கள் என்றும் அவர்கள் திட்டமிட்டு கொல்லப்பட்டு உள்ளார்கள் என்றும் பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தினார்கள்.

கடந்த ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக ஐதராபாத் மேல்நீதிமன்ற உத்தரவுபடி ஆந்திர அரசு ஒரு விசாரணை குழுவை அமைத்தது. ஒரு ஆண்டு ஆகியும் விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால் இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று ஐதராபாத் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: