பின்வரிசை – Pinvarisai

ஜனாதிபதியின் மகன் யோஷிதவுக்கு விளக்கமறியல்

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on ஜனவரி 30, 2016

நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித்த ராஜபக்ஷ மற்றும்-
சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் Carlton Sports Network (CSN) channel தலைவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் பேச்சாளருமான ரொஹான் வெலிவிட்ட நிஷாந்த ரணதுங்க உட்பட்ட ஐவரையும் 14 நாட்கள் (எதிர்வரும் பெப்ரவரி 11ஆம் திகதிவரை) விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்ற நீதிபதி தம்மிக்க ஹேமபால இன்று (30) உத்தரவிட்டார்.
சீ.எஸ்.என். தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்காக இவர்கள் நிதிக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு இன்று காலை அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களிடம் முன்னனெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யோஷித்தவின் தந்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாயாரான ஷிரந்தி ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் கடுவலை நீதவான் நீதிமன்றத்துக்கு வந்தனர் .
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: