பின்வரிசை – Pinvarisai

உலகப் போரின்போது யூதர்களை காத்த நால்வருக்கு புகழாரம்

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on ஜனவரி 30, 2016

இரண்டாம் உலகப் போரின்போது நாஜிக்களிடமிருந்து யூதர்களைக் காப்பாற்றிய நால்வருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த புதன்கிழமை புகழாரம் சூட்டினார்.

யூத இனப் படுகொலை நினைவு தினத்தையொட்டி வாஷிங்டனிலுள்ள இஸ்ரேலியத் தூதரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த நால்வரும் கெளரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஒபாமா பேசுகையில் “”யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. எந்த ஒரு மதத்தின் மீதான தாக்குதலும் அனைத்து மதங்களின் மீதான தாக்குதலுக்கு சமமாகும்” என்றார்.
இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லர் தலைமையிலான நாஜிக்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளால் 60 லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
நாஜிக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தில் அமைந்துள்ள ஆஷ்விட்ஸ் சிறை முகாமில் மட்டும் 11 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
1945-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் திகதி அந்த முகாம் ரஷியப் படையினரால் விடுவிக்கப்பட்டது. அந்த நாளை யூத இனப் படுகொலை நினைவு தினமாக ஐ.நா. அறிவித்துள்ளது.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: