பின்வரிசை – Pinvarisai

இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க தொல். திருமாவளவன் வலியுறுத்து

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on மார்ச் 8, 2016

Image result for தொல்.திருமாவளவன்இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய  மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் திங்கள்கிழமை தெரிவித்தார். தோப்பூரை அடுத்த உச்சப்பட்டி அகதிகள் முகாம் அதிகாரியை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை அகதி ரவீந்திரன்  மின்கம்பத்தில் ஏறி தற்கொலை செய்து கொண்டார். (more…)
Advertisements

“இ-மெயில்” தந்தை ரே டாம்லின்சன் 74 வயதில் காலமானார்

Posted in அறிவியல் by pinvarisai on மார்ச் 8, 2016

உலக அளவில் எல்லோராலும் இன்று உபயோகிக்கப்படும் இமெயிலின் முன்னோடியான ரே டாம்லின்சன் காலமானார். அவருக்கு வயது 74.  தந்தி Image result for Ray Tomlinsonமற்றும் தபால் சேவையின் மூலம் அஞ்சல் அனுப்பியது உள்பட அத்தனை பழங்கால வழக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் “இமெயில்” எனப்படும் மின்னஞ்சல் முறையை கண்டுபிடித்தவர் ரேமண்ட் டாம்லின்சன். “@” என்னும் செயலியையும் கண்டறிந்து மெயில்களின் முகவரிக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் ரே. அமெரிக்காவில் பிறந்து மாஸாச்சூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம்பெற்ற டாம்லின்சன் அர்பாநெட் சிஸ்டம் முறையில் நெட்ஒர்க் இணைப்பால் ஒன்றிணைக்கப்பட்டுள்ள ஒரு கம்ப்யூட்டரில் இருந்து இன்னொரு கம்ப்யூட்டருக்கு கடிதங்களை அனுப்பும் முறையை 1971 ஆம் ஆண்டு முதன்முதலாக கண்டுபிடித்தார்.

(more…)

தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: மகாசிவராத்திரியன்று சிவன்கோவில்களுக்கு பலத்த பாதுகாப்பு-

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on மார்ச் 7, 2016

இந்தியாவிற்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலி காரணமாக இந்தியாவில்தனர்.Image result for சிவன் images உள்ள முக்கிய சிவன் கோவில்களில்  பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் மகாசிவராத்திரியன்று பக்தர்கள் பயமின்றி இறைவனை தரிசனம் செய்தனர். பாகிஸ்தானின்  10 லஷ்கர்-இ-தொய்பா  மற்றும் ஜெய்ஷ்-இ- முகமது தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளதாகவும்முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் நாட்டில் உள்ள முக்கிய திருக்கோவிலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடிய சாத்தியம் இருப்பதால் மகாசிவராத்திரியையொட்டி நாட்டில் உள்ள முக்கிய சிவன் கோவில்களில்  பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால்  இரவு மகாசிவராத்திரி பூஜைக்காக குவிந்திருந்த பக்தர்கள் இறைவனை எந்தவித பயமின்றி இறைவனை தரிசித்தனர்.

(more…)

வாய்ப்புற்று நோயை தீர்க்கும் அருமருந்தாகும் வேப்பிலை!

Posted in அறிவியல் by pinvarisai on மார்ச் 7, 2016

அனைத்து   நோய்களையும் தீர்க்கும்  கற்பக மரமாக திகழும்Image result for வேப்பிலை  வேப்பிலையின்  இலை மற்றும்  பூவிலிருந்து எடுக்கப்பட்ட தாவர வேதிப்பொருளான நிம்போலைடூ வாய்ப்புற்று நோயை குணமாக்கும் சக்தி கொண்டது என அண்ணாமலைப் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர். இன்றளவில், வாய்ப்புற்று நோய்க்கு பல்வேறு சிகிச்சைகள் இருப்பினும் புற்று நோயாளிகளின்  வாழ்நாள் திறன் மிகவும் குறைவாகவே உள்ளது.  அண்ணாமலைப் பல்கலைக்கழகம்  உயிர் வேதியியல் மற்றும் உயிர் தொழில் நுட்பவியல் துறையை சேர்ந்த பேராசிரியர் நாகினி மற்றும் அவரது ஆராய்ச்சி குழுவானது வெள்ளெலியை பயன்படுத்தி வாய்ப்புற்று நோயின் போது ஏற்படும் தோலிமம் மாற்றத்தை விளக்கி உள்ளனர்.

(more…)

தமிழகத்தில் ஈழ அகதி மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை: அரசின் மனித நேயமின்மையே காரணமாம்

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on மார்ச் 7, 2016

Image result for மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு கிராமத்தில் உள்ள முகாமைச் சேர்ந்த ரவிச்சந்திரன்மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு கிராமத்தில் உள்ள முகாமைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற அகதி அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மின்சாரக் கம்பத்தில் தொங்கி தற்கொலை செய்து கொண்டhர்.இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், வருத்தமும்,  துயரமும் அளிக்கிறது. நம்பி வந்த
அகதிகளின் உயிரைக் காக்கத் தவறியதற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும் என்று  பாமக  நிறுவனர்  Image result for ராமதாஸ்ராமதாஸ் கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்-                 தமிழக ஆட்சியாளர்கள் மற்றும் சில அதிகாரிகளின் மனிதநேயமற்ற அணுகுமுறை தான் இலங்கை அகதி ரவிச்சந்திரனின் தற்கொலைக்கு காரணம் ஆகும்.கூத்தியார்குண்டு முகாமிலுள்ள அகதிகளை கணக்கெடுக்கும் பணி சில நாட்களாக நடைபெற்று வருImage result for வைகோகிறது. முகாமில்   கணக்கெடுப்புக்காக சென்ற வருவாய் அதிகாரி ஒருவர்  ரவிச்சந்திரன் முகாமில் இல்லாதது குறித்து விசாரித்துள்ளார். அப்போது அங்கு வந்த ரவிச்சந்திரன் உடல்நலம் பாதித்த பேரனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வந்ததால் தாமதமானதாக கூறியுள்ளார். ஆனால்  அதை ஏற்க மறுத்த அதிகாரி ரவிச்சந்திரனின்  பெயரை அகதிகள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளார். இப்படி செய்தால் நாங்கள் எப்படி வாழ முடியும்? என்று  ரவிச்சந்திரன் கேட்ட போது  வாழ வழியில்லை என்றால் மின்சாரம் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்து கொள் என்று திமிராகக் கூறியுள்ளார்.

(more…)

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி றேகனின் மனைவி மரணம்

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on மார்ச் 7, 2016

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி றொனால்ட்  றேகனின் மனைவியும், முன்னாள் Image result for Nancy Reaganஹாலிவுட் நடிகையுமான நான்ஸி றேகன் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவரது வயது 94.  மhரடைப்பு காரணமாக நான்சி உயிரிழந்ததாக  அவரது உதவியாளர் அல்லிஸன் பேரியோ, அமெரிக்க ஊடகத்திடம் தெரிவித்தார்.  றொனால்ட்  றேகன் அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த 1981இல் பதவியேற்றார். அவர் பதவியில் இருந்த எட்டு ஆண்டுகளிலும், நான்ஸிதான் திரைமறைவில் இருந்து இயக்கி வந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தனது கணவரின் பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகவும் நான்ஸி மீது புகார் கூறப்பட்டது.

(more…)

இரண்டு வாரங்களாக உணவுத்தவிர்ப்பு போராட்டம்: தமிழ் அரசியல்கைதிகள் நிலை கவலைக்கிடம்; சிறுநீருடன் இரத்தக்கசிவு – மறுக்கிறார் ஊடகப்பேச்சாளர்

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on மார்ச் 7, 2016

கடந்த 11 நாட்களாக கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உணவுத்தவிர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்திவரும் தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரில் நால்வரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் தெரிவித்துள்ளார் என்று “தமிழ் Mirror” தினசரிப்பத்திரிகை இன்று (7) செய்தி வெளியிட்டிருக்கிறது. உணவுத்தவிர்ப்பு போராட்டம் நடத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னரே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
உணவுத்தவிர்ப்பு போராட்டம் நடத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலைJaffna-Fasting-Protest-10 படுமோசமாக இருக்கிறது. நான்கு தமிழ் அரசியல் கைதிகளுக்கு சிறுநீரோடு இரத்தமும் வெளியேறி வருகிறது என்றும் இவர்களுக்கு சேலைன் ஏற்றுவதற்கு நடவடிக்கை எடு;க்கப்பட்டபோதிலும் அவர்கள் அதனை நிராகரித்து விட்டனர் என்றும்அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர்  துஷார உபுல்தெனியாவிடம்  விசாரித்த போது “உணவுத்தவிர்ப்பு போராட்டம் நடத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்ற செய்தி பொய்யானது” என அவர் மறுத்துள்ளார் என்றும் அச்செய்தி தெரிவித்துள்ளது.

(more…)

பாதியில் முடிந்த பயணம்…சந்திரபாபு… அமரத்துவம் அடைந்த தினம் இன்று (7)

Posted in சினிமா by pinvarisai on மார்ச் 7, 2016

Image result for சந்திரபாபு
                                       மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்                                   சந்திரபாபு                                            மனைவி ஷீலா
விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டமையால் இவரது பெற்றோர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட அவர்களுடன் சென்ற சந்திரபாபு கொழும்பு நகரில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
டி.அருள் எழிலன்
கனவுகள் விபரீதமானவை. வாழ்க்கைக்கும் கனவுக்குமான இடைவெளி அதிகப்படும் போது நேருகிற அவலங்கள் துக்ககரமான சில நினைவுகளை விட்டுச் செல்கிறது.அந்த நினைவில் இன்றும் நிழலாடிக் கொண்டிருக்கும் ஒரு பிம்பம்தான் சந்திரபாபு.

(more…)

தேநீர் குடித்தால் மாரடைப்பில் இருந்து தப்பிக்கலாம்

Posted in அறிவியல் by pinvarisai on மார்ச் 5, 2016

தேநீர் மற்றும் கோப்பி ஆகியவற்றை குடிக்காமல் இருந்தால் நல்லது என்று சொல்வார்கள். ஆனால்  தற்போது தேநீர் குடித்தால் நல்லது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  தினமும் ஒரு கப் தேநீர் குடித்தால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்பதை அமெரிக்க மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அமெரிக்காவின் ‘ஜான் ஹாப்கின்ஸ்’ மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில்  இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்  “மாரடைப்பை ஏற்படுத்தும் கால்சியம் ரத்தக் குழாய்களில் தங்குவதை தேநீர் கட்டுப்படுத்துவதால்  தேநீர் அருந்தாதவர்களைவிட தினமும் தேநீர் அருந்துபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 35 சதவீதம் குறைவாக இறுக்கிறது” என்று தெரிவித்தனர்.

பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ளும் போப் பிரான்சிஸ்

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on மார்ச் 5, 2016

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அழைப்பின் பேரில் போப் பிரான்சிஸ்  பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் சார்பில் அந்நாட்டு துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் கம்ரான் மைக்கேல் மற்றும் மத நல்வாழ்வுத் துறை அமைச்சர் சர்தார் யூசப் ஆகியோர் போப் பிரான்சிஸை நேரில் சந்தித்து இந்த அழைப்பை விடுத்தனர்.
முஸ்லீம்கள் அதிகமுள்ள பாகிஸ்தானில் மொத்த மக்கட்தொகையில் சுமார் 1.6 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.